இறுதிச் சுற்றில் ஹாலப், கிர்கியோஸ்

By ஏஎஃப்பி

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு சிமோனா ஹாலப், நிக் கிர்கியோஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியின் அரை இறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றன. இதில் பெண்களுக்கான அரை இறுதி ஆட்டத்தில் ருமேனிய வீராங்கனையான சிமோனா ஹாலப், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் சிமோனா ஹாலப், 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச் சுற்றில் அவர் விம்பிள்டன் சாம்பியனான கார்பைன் முகுருசாவை எதிர்த்து ஆடவுள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் நடந்த மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் கார்பைன் முகுருசா, 6-3, 6-2 என்ற செட்கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் சிமோனா ஹாலப் வெற்றி பெற்றால், அவர் மகளிர் டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேற வாய்ப்புகள் உள்ளன.

கிர்கியோஸ் முன்னேற்றம்

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரரான நிக் கிர்கியோஸ், 7-6,7-6 என்ற செட்கணக்கில் ஸ்பெயின் வீரரான டேவிட் பெரரை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் பல்கேரிய வீரரான டிமிட்ரோவ், அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர்கொண்டார். இப்போட்டியில் டிமிட்ரோவ், 7-6, 7-6 என்ற செட்கணக்கில் போராடி வென்றார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

51 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்