கால்பந்து லீக் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார் பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ஜூனியர்.
இவர் ஸ்பெயின், பார்சிலோனா அணியிலிருந்து பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணிக்கு மாறியுள்ளார்.
அதாவது பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி நெய்மரை 222 மில்லியன் யூரோக்கள் (263 மில்லியன் டாலர்கள்) தொகைக்கு 5 ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது.
2022 வரை பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்கு நெய்மர் ஆடும் பட்சத்தில் அவர் வாராந்திர ஊதியமாக 550,000 யூரோக்கள் பெறுவார் என்று ஊடகங்கள் கூறிவந்தன.
ஆனால் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஒரு வீரரை ஒப்பந்தம் செய்வது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஏஃபா) கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்கத்தான் உள்ளதா என்று லா லிகா மற்றும் பார்சிலோனா கிளப்கள் கேள்வி எழுப்பி இதனை கூட்டமைப்புக்கு புகாராக அளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்பு கடந்த ஆகஸ்டில் பால் போக்பா என்ற வீரர் யுவண்டஸ் அணியிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு 105 மில்லியன் யூரோக்கள் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதே அதிக தொகையாக இருந்து வந்தது, இதனை நெய்மர் ஒப்பந்தம் தற்போது முறியடித்து விட்டது.
நெய்மர் கூறும்போது, “பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியுடன் இணைய பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த கிளப் சவாலானது, லட்சியங்கள் கொண்டது. இதன் ரசிகர்கள் விரும்பும் கோப்பைகளை வென்று தருவதே என் வேலை, இன்றிலிருந்து என் புதிய அணி சகாக்களுக்கு உதவுவதே என் கடமை. உலகம் முழுதும் இருக்கும் இந்த கிளப் ரசிகர்களுக்கு புதிய எல்லைகளைக் காட்ட விழைகிறேன்.
லா லிகா தலைவர் ஜேவியர் டேபஸ் கூறும்போது, ‘பிஎஸ்ஜி கிளப் நிதி ஊக்கமருந்து’ விவகாரத்தைத் தொடங்கியுள்ளது, இதற்கு எதிராக புகார் அளிப்போம்’ என்றார். மேலும் அவர் கூறும்போது பிஎஸ்ஜி அணி கத்தார் ஸ்போர்ட்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்சுக்கு சொந்தமானது, இது அரசு ஆதரவுள்ள கிளப் ஆகும், என்றார்.
வருவாய்க்கு மீறி ஒரு கிளப் செலவு செய்தால் யுஇஎப்ஏ அந்த கிளப்புக்கு தடை விதிப்பது வழக்கம். ஆனால் பன்னாட்டு அணி மாற்று ஒப்பந்தம் ஃபிபாவின் கீழ் வருவதாக யுஏஃபா தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago