உலக தடகள சாம்பியன்ஷிப்: நீளம் தாண்டுதலில் பிரிட்னிக்கு தங்கம்

By ஏஎஃப்பி

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டும் பிரிவில் அமெரிக்க வீராங்கனை பிரிட்னி ரீஸ் 4-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான நீளம் தாண்டும் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்க வீராங்கனையான பிரிட்னி ரீஸ் 7.02 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெல்லும் 4-வது தங்கப் பதக்கமாகும் இது. ஏற்கெனவே 2009, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த தங்கப் பதக்கத்தை 2 வாரங்களுக்கு முன் காலமான தனது தாத்தாவுக்கு அர்ப்பணிப்பதாக பிரிட்னி ரீஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இப்போட்டியில் 7 மீட்டர் நீளம் தாண்டிய ரஷ்ய வீராங்கனையான டாரியா கிளிஷினா வெள்ளிப் பதக்கத்தையும், 6.97 மீட்டர் நீளம் தாண்டிய மற்றொரு அமெரிக்க வீராங்கனையான டியானா பர்டொலேடா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதில் வெண்கலப் பதக்கம் வென்றவரான டியானா பர்டொலேடே, ஒலிம்பிக் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

100 மீட்டர் ரிலே

ஆண்களுக்கான பிரிவில் நடந்த 4x100 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயத்தின் ஹீட்ஸில் உசேன் போல்ட் , ஜூலியன் போர்டே, மைக்கேல் கேம்பல், டைகெண்டோ டிராகி ஆகியோரைக் கொண்ட ஜமைக்கா அணி, 37.95 விநாடிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் வென்ற பிறகு நிருபர்களிடம் பேசிய உசேன் போல்ட், “போட்டி நடந்த மைதானத்தில் ரசிகர்கள் எங்களுக்கு அளித்த ஊக்கம் மிகச்சிறப்பாக இருந்தது. அவர்கள் தந்த ஊக்கத்தால் எங்களால் வேகமாக ஓடி சாதிக்க முடிந்தது” என்றார். தனிநபர் ஓட்டப் பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ள உசேன் போல்ட், இந்த ரிலே பந்தயத்தின் இறுதி ஆட்டத்துடன் தடகள உலகில் இருந்து முற்றிலுமாக விலகவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்