முன்னாள் இந்திய இடது கை பேட்ஸ்மென் தினேஷ் மோங்கியா பிசிசிஐ-யிடம் மன்னிப்புக்காக மன்றாடி வருகிறார்.
பிசிசிஐ-யால் தடைசெய்யப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) டி20 கிரிக்கெட்டில் 2007-ம் ஆண்டு சண்டிகர் லயன்ஸ் அணிக்காக ஆடினார் தினேஷ் மோங்கியா. ஆனால் அப்போது ஐசிஎல் கிரிக்கெட் மீது பெரிய அளவுக்கு சூதாட்ட, ஊழல் புகார் எழுந்தது.
முன்னால் நியூஸிலாந்து வீரர் லூ வின்செண்ட், தினேஷ் மோங்கியாவையும் சக வீரர் கிறிஸ் கெய்ன்சையும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக லண்டன் கோர்ட்டில் 2015-ம் ஆண்டு விசாரணையில் தெரிவித்தார்.
ஆனால் தனக்கும் சூதாட்டத்துக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று தினேஷ் மோங்கியா மறுத்துள்ளார்.
“மன்னிப்பு பெற்ற ஐசிஎல் வீரர்களில் நான் இல்லை, எனக்கு பிசிசிஐ இன்னமும் மன்னிப்பு வழங்கவில்லை. எனக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லை.
அம்பாத்தி ராயுடு ஐசிஎல் கிரிக்கெட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் அவர் மன்னிக்கப்பட்டு இந்திய அணிக்காக விளையாடினார்.
பிசிசிஐ எனக்குத் தடை விதிக்கவில்லை என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை, ஆனால் என் கோரிக்கைக்கு பதில் அளிக்கவும் இல்லை. நான் எனக்குச் சேர வேண்டிய தொகைக்காக நிறைய முறை எழுதிவிட்டேன் ஆனால் ஒரு பதிலும் இல்லை.
மொகமது அசாருதின் விஷயத்தை ஒருவர் கையிலெடுத்து பேசியது போல் எனக்காகவும் யாராவது பேசுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் தினேஷ் மோங்கியா.
தினேஷ் மோங்கியா முதல் தர கிரிக்கெட்டில் நன்றாக ஆடியவர், 121 போட்டிகளில் ஆடியுள்ளார், ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 121 போட்டிகளில் ஆடியுள்ளார். 2006-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய ஒரே டி20 போட்டியில் அதிகபட்சமாக 38 ரன்களை எடுத்தவர் தினேஷ் மொங்கியா.
57 ஒருநாள் போட்டிகளில் 1230 ரன்களை 27.95 என்ற சராசரியில் எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 71.47%, அதிகபட்ச ஸ்கோர் 159 நாட் அவுட் (2002, ஜிம்பாப்வேக்கு எதிராக) முதல் தர கிரிக்கெட்டில் 121 ஆட்டங்களில் 8028 ரன்களை 48.95 என்ற சராசரியில் 27 சதங்கள் 28 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளில் 198 ஆட்டங்களில் 5535 ரன்களை 35.25 என்ற சராசரியில் எடுத்தவர்.
தொடக்க வீரராகக் களமிறங்குவது முதல் பினிஷர் பங்கு வரையிலும் ஆடக்கூடிய திறமையுடையவர். தவறான வழிகாட்டுதலில் ஐசிஎல் கிரிக்கெட்டில் போய் இணைந்து கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தார், இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு அப்போது ரசிகர்களுக்கு இருந்தது. இன்று இவருக்கு வயது 40 ஆகிவிட்டது. ஷார்ட் பிட்ச் என்றால் இயல்பாக புல், ஹூக் ஆடுபவர் தினேஷ் மோங்கியா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago