துரோணாச்சார்யா விருது பரிந்துரைப் பட்டியலில் இருந்து மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா பெயர் நீக்கம்: உள்நோக்கம் இருப்பதாக புகார்

By வி.சீனிவாசன்

துரோணாச்சார்யா விருது பரிந்துரைப் பட்டியலில் இருந்து பாராலிம்பிக் வீரர் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணாவின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் சின்னவடகம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் மாரியப்பன். இவர் ரியோ-வில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். உலக அளவிலான சாதனை புரிந்த மாரியப்பனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. மேலும், இந்தாண்டுக்கான அர்ஜூனா விருதுக்கும் மாரியப்பனின் பெயர் மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனின் பயிற்சியாளராக பெங்களூருவை சேர்ந்த சத்யநாராயணா உள்ளார். இந்நிலையில், நடப்பாண்டுக்கு அர்ஜூனா, கேல் ரத்னா, துரோணாச்சார்யா உள்ளிட்ட விருதுகளை பெற தகுதியானவர்களின் பெயரை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இதில், துரோணாச்சார்யா விருதுக்கு சத்யநாராயணாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சத்யநாராயணா மீது குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளதால், விருது பட்டியலில் இருந்து அவரது பெயரை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் நேற்று முன்தினம் இரவு நீக்கியது.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் சத்யநாராயணா கூறியதாவது:

துரோணாச்சார்யா விருது பரிந்துரைப் பட்டியலில் இருந்து எனது பெயரை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்தவொரு வழக்கிலும், குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளியாக கருத முடியாது, வழக்கில் தண்டனை பெற்றால் மட்டுமே குற்றவாளியாக கருத முடியும் என உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.

பாராலிம்பிக் சங்க தலைவர் சந்திரசேகர், நான் (சத்யநாராயணா) மற்றும் சிலரது பெயரில் நீதிமன்றத்தில் குற்றவியல் சார்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதுபோன்ற சூழலில், வழக்கில் எனக்கு எதிராக தீர்ப்பு வராத நிலையில், விருது பரிந்துரைப் பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கியதில் உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறேன்.

அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஹாக்கி விளையாட்டு வீரர் சர்தார் சிங் மீது குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் விருதுக்கு தகுதியானவர் என்கிற போது, நானும் தகுதியானவன் தான். எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய விசாரணை செய்து, விருது பரிந்துரைப் பட்டியலில் என் பெயரை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்