டிவிலியர்ஸிடம் பேட்டிங் பாடம் கற்ற கே.எல்.ராகுல்: ஆஸி. தொடருக்குத் தேர்வு செய்யப்படுவாரா?

By இரா.முத்துக்குமார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வு நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் துலிப் கோப்பை இறுதி போட்டியில் தெற்கு மண்டலத்திற்காக 185 ரன்களை எடுத்துள்ளார் கர்நாடக பேட்ஸ்மென் கே.எல்.ராகுல்.

டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மத்திய மண்டலம், தெற்கு மண்டலம் இடையே துலிப் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. 5 நாள் போட்டியான இந்த ஆட்டத்தின் 3ஆம் நாளான இன்று தெற்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 379 ரன்களை எடுத்து 103 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ராபின் உத்தப்பா (80 ரன்கள், 97 பந்துகள் 13 பவுண்டரி 2 சிக்சர்) உடன் கே.எல்.ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்கி 233 பந்துகளில் 19 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 185 ரன்கள் எடுத்தார்.

22 வயதான, கன்னூர் லோகேஷ் ராகுல் என்ற இயற்பெயர் கொண்ட ராகுல், 26 முதல் தர ஆட்டங்களில் 4 சதங்கள், 8 அரைசதங்களுடன் 3680 ரன்களை 45.76 என்ற சராசரியில் பெற்றுள்ளார். இவர் விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மென் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் “ராகுல் திராவிட் போல் நாட்டிற்காக விளையாடி அவரைப் போல் அதிக ரன்களைக் குவிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

ஆனால் நான் ஏ.பி.டிவிலியர்ஸ் பேட்டிங் செய்வதை மிகவும் ரசித்துப் பார்ப்பேன். ஐபிஎல் போட்டிகளின் போது ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் அவரிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிரிக்கெட் ஷாட்களின் நுணுக்கங்கள் பலவற்றை அவரிடம் கற்றுக் கொண்டேன். அவரிடம் உள்ள ஸ்ட்ரோக்குகளின் வகைகளைக் கண்டு அசந்து போனேன்” என்றார்.

துலிப் கோப்பை இறுதி போட்டியைக் காண இந்திய அணித் தேர்வாளர்கள், விக்ரம் ரத்தோர், சபா கரிம் ஆகியோர் மைதானத்தில் இருந்தது தனக்குத் தெரியாது என்று கூறும் ராகுல், “அணித் தேர்வாளர்கள் இருப்பதும் எனக்குத் தெரியாது, அதே போல் ஆஸ்திரேலியா தொடர் பற்றியும் எனது சிந்தனை இல்லை. ஷாட் பிட்ச் பந்துகளைக் கையாள்வதில் ஷாட் தேர்வில் எனது கவனம் இருந்தது.

சதம் எடுத்த பிறகு அவுட் ஆகி வந்தேன் இந்த இன்னிங்ஸிற்குப் பிறகு பெரிய சதங்களை நோக்கி எனது கவனம் செல்லும்.” என்றார் இந்த எதிர்கால இந்திய தொடக்க வீரர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்