வங்கதேச அணி வெற்றி பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்களுக்கு இடையேயும் சிறு சிறு வார்த்தைப் பரிமாற்றங்கள், ஸ்லெட்ஜிங் ஆகியவை நடைபெற்றன.
நேதன் லயனுக்கு ஷாகிப் அல் ஹசன் ‘செண்ட் ஆஃப்’ கொடுத்தார். வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட் ஆகியோரும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதோடு, வங்கதேச ஸ்லெட்ஜிங்குக்கு எதிர்வினையும் ஆற்றியது நிகழ்ந்தது.
இந்நிலையில் ஆட்ட நாயகன் ஷாகிப் அல் ஹசன் கூறும்போது, “ஸ்லெட்ஜிங்கில் ஆஸ்திரேலியர்கள் வல்லவர்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு வருகிறோம். இந்த டெஸ்ட்டிற்குப் பிறகு அவர்கள் எங்களுக்கு அதிகம் மரியாதை கொடுப்பார்கள்.
உள்நாட்டில் நாங்கள் எந்த அணியையும் வீழ்த்துவோம் என்று நம்பிக்கை வைத்துள்ளோம். கடந்த 2-3 ஆண்டுகளாகவே எங்களுக்கு அந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பலர் எங்களை கவனிப்பதில்லை, ஆனால் நாங்கள் எங்கள் வேலையைத் திறம்பட செய்து வருகிறோம்” என்றார்.
கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் கூறும்போது, “அவர்கள் ஆக்ரோஷமாக ஆடுகின்றனர், நாங்களும் ஆக்ரோஷமான அணியே என்பதை அவர்களுக்குக் காட்டியுள்ளோம். எங்கள் பேட்டிங், பவுலிங் தவிர எங்கள் உடல் மொழியையும் அவர்கள் பார்த்துள்ளார்கள்.
முதல் செஷன் முடியும் தறுவாயில் பார்த்தால் கிளென் மேக்ஸ்வெல் மேலும் ஓவர் வீசிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார், காலத்தைக் கடத்தினார், இது ஆஸ்திரேலிய அணியின் மனநிலையை எதிரொலித்தது.
இந்த வெற்றி ஒரு பெரிய செய்தியாகும். எங்கள் பின்கள வரிசை வீரர்களை அவர்கள் ஸ்லெட்ஜிங் செய்தாலும் கூடுதல் ரன்கள் தேவை என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். நாங்கள் பழைய வங்கதேசம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள், இப்போது எந்த நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்கள் எங்களிடத்தில் உள்ளனர்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொடரை வெல்வதே குறிக்கோள்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago