71-வது சுதந்திர தினத்தையொட்டி இலங்கையின் கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தேசியக் கொடியை ஏற்றினார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் நாட்டின் 71-வது சுதந்திரதினத்தை நேற்று கண்டியில் இந்திய வீரர்கள் கொண்டாடினர்.
நிகழ்ச்சியின் போது தேசியக் கொடியை கேப்டன் விராட் கோலி ஏற்றினார்.
அவரது அருகில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நின்றார். இந்த நிகழ்ச்சியில் 15 பேர் கொண்ட இந்திய அணியினர், துணைப் பயிற்சியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் அனைவரும் தேசிய கீதம் பாடினார்கள். இதுதொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 ஆட்டம் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 20-ம் தேதி தம்புலாவில் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago