கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்தது.
அடிலெய்டில் நடைபெற்று வரும் 2 நாள் பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சு சிறப்பாக செயல்பட்டது.
கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணி மிகவும் இளம் அணியாகும். இரண்டு வீரர்கள் மட்டும்தான் 22 வயதுக்கும் அதிகமானவர்கள். அந்த அணிக்கு ஏ.ஜே.டர்னர் கேப்டனாக செயல்படுகிறார்.
டாஸ் வென்ற டர்னர் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இந்திய பந்து வீச்சாளர்களில் வருண் ஆரோன் வேகமாக வீசினார், பந்துகள் எகிறின. இதனால் 3 முன்கள வீரர்களின் விக்கெட்டுகளை அவர் சாய்த்தார்.
புவனேஷ் குமார், மொகமது ஷமி மற்றும் லெக்ஸ்பின்னர் கரன் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அஸ்வின் 1 விக்கெட்டை வீழ்த்தினார். முன்னணி பவுலர்கள் அனைவருக்கும் விக்கெட்டுகள் கிடைத்துள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 71.5 ஓவர்களில் 219 ரன்களுக்குச் சுருண்டது. ஆட்டம் முடிவதற்கு முன்பாக 16 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவன் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
முரளி விஜய் 32 ரன்களுடனும், புஜாரா 13 ரன்களுடனும் ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்தனர், இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் ஓவரின் 5-வது பந்தில் புவனேஷ் குமாரிடம் மேத்யூ ஷார்ட் என்ற வீரர் ரன் எடுக்காமல் சஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பிறகு டர்னர், ரியான் கார்ட்டர்ஸ் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 50 ரன்களைச் சேர்த்தனர். அதன் பிறகு வருண் ஆரோன் 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டர்னரை எட்ஜ் செய்ய வைத்த ஆரோன், பிறகு நிக் ஸ்டீவன்ஸ் என்பவரை அபார வேகப்பந்தில் பவுல்டு செய்தார்.
அதன் பிறகு 4-வது விக்கெட்டுக்காக கார்ட்டர்ஸ், கெல்வின் ஸ்மித் அரைசதக் கூட்டணி அமைத்தனர். அப்போது ஸ்மித்தை புவனேஷ் குமார் வீழ்த்தினார். அதிக ஸ்கோர் என்ற வகையில் 58 ரன்கள் எடுத்த தொடக்க வீரர் கார்ட்டர்ஸ், சஹாவிடம் கேட்ச் கொடுத்து அஸ்வினிடம் வீழ்ந்தார்.
விருத்திமான் சஹாவிற்கு அருமையான முதல் தினமாக அமைந்தது. 5 கேட்ச்கள், ஒரு ஸ்டம்பிங் என்று 6 பேரை வீழ்த்துவதில் பங்களிப்பு செய்துள்ளார்.
அதன் பிறகு ஷமி, ஆரோன், கரன் சர்மா விக்கெட்டுகளைச் சாய்க்க 167/9 என்று ஆனது கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன். ஆனால் அதிகம் அறியப்படாத ஹேரி நீல்சன் என்ற வீரர் 40 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டுக்காக 52 ரன்கள் சேர்க்கப்பட்டது. கரன் சர்மா இன்னிங்சை முடித்த போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா 219 ரன்களை எட்டியிருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago