டாப் 10-ல் இருந்து சறுக்கினார் சிந்து

By செய்திப்பிரிவு

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 11-வது இடத்துக்கு பின் தங்கியுள்ளார். அவர் முன்பு 9-வது இடத்தில் இருந்தார். இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நெவால் தொடர்ந்து 8-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ஜனவரி மாதம் நடைபெற்ற சையத் மோதி சர்வதேச பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு சிந்து முன்னேறினார். இதன் மூலம் 9-வது இடத்தை பிடித்தார். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றிலேயே சிந்து தோல்வியடைந்து வெளியேறினார். அவரது இந்த தோல்வி இப்போது தரவரிசையில் எதிரொலித்துள்ளது.

ஆடவர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப் 4 இடங்கள் முன்னேறி 19-வது இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் தான் விளையாடிய ஸ்விஸ் ஓபனில் அரையிறுதி வரையும், இந்திய ஓபனில் காலிறுதி வரையும் காஷ்யப் முன்னேறினார். இதன் மூலம் தரவரிசையிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். இதற்கு முன்பு காஷ்யப் அதிகபட்சமாக தரவரிசையில் 6-வது இடம் வரை முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாந்த், 25-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்