பாட்மிண்டன் போட்டியில் தோற்றதால் முதல் முறையாக என் மகள் அழுததை பார்த்தேன்: சிந்துவின் தந்தை உருக்கம்

By ஏஎன்ஐ

பாட்மிண்டன் போட்டியில் தோற்ற பிறகு என் மகள் அழுததை உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு பிறகுதான் முதல் முறையாக பார்த்தேன் என்று பி.வி.சிந்துவின் தந்தை உருக்கத்துடன் கூறியுள்ளார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை ஒகுஹராவிடம் 19-21, 22-20, 20-22 என்ற புள்ளிக்கணக்கில் தோற்றார். இப்போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும், இறுதிப் போட்டிவரை முன்னேறியதால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. கடுமையாக போராடியும் இறுதிப்போட்டியில் தோற்றதால் பி.வி.சிந்து கண்ணீர் சிந்தினார்.

இது குறித்து பி.வி.சிந்துவின் தந்தை ரமணா கூறும்போது, “உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் இப்போட்டியில் கடைசிவரை சிந்து கடுமையாக போராடியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு பாட்மிண்டன் போட்டிக்கு பிறகு சிந்து அழுததை உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு பிறகுதான் முதல் முறையாக பார்த்தேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்