சூதாட்டம் மற்றும் மேட்ச் ஃபிக்ஸிங்கில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை - முத்கல் கமிட்டி

By பிடிஐ

ஐசிசி தலைவர் என். சீனிவாசனுக்கு ஐபிஎல் சூதாட்டம் மற்றும் மேட்ச் ஃபிக்ஸிங்கில் தொடர்பு இல்லை என்று முத்கல் கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டம் மற்றும் மேட்ச் ஃபிக் ஸிங் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரிக்க பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை உச்ச நீதி மன்றம் நியமித்தது. ஐபிஎல் கிரிக் கெட் போட்டியில் சூதாட்டம், மேட்ச் ஃபிக்சிங் தொடர்பான குற்றச் சாட்டை விசாரித்த முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 3-ம் தேதி தாக்கல் செய்தது.

முத்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணை, உச்ச நீதிமன் றத்தில் நீதிபதிகள் தாக்கூர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, சென்ற வாரம் வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது, முத்கல் கமிட்டி அறிக்கையில் ஐசிசி தலைவர் என்.சீனிவாசன், அவ ருடைய மருமகன் குருநாத் மெய்யப் பன், ராஜஸ்தான் அணி உரிமை யாளர் ராஜ் குந்த்ரா, ஐபிஎல் தலைமை செயல் அதிகாரி சுந்தர் ராமன் ஆகிய நான்கு பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது தெரியவந்தது.

என். சீனிவாசனுக்கு ஐபிஎல் சூதாட்டம் மற்றும் மேட்ச் ஃபிக்ஸிங்கில் தொடர்பு இல்லை என்று முத்கல் கமிட்டி, உச்ச நீதிமன்றத்தில் தெரி வித்துள்ளது. முத்கல் கமிட்டி மேலும் தெரிவித்ததாவது:

சீனிவாசனுக்கு சூதாட்டம் மற்றும் மேட்ச் ஃபிக்ஸிங்கில் தொடர்பு இல்லை. ஐபிஎல் சூதாட் டம் தொடர்பான விசாரணையைப் பாதிக்கும் வகையில் சீனிவாசன் செயல்படவில்லை.

ஆனால் சீனிவாசன் மற்றும் மற்ற நான்கு பிசிசிஐ அதிகாரிகளும், ஐபிஎல்-லில் ஒரு வீரர் (பெயர் வெளியிடப்படவில்லை), நன்னடத்தை விதிகளை மீறுவது குறித்து அறிந்திருந்தார்கள். ஆனால், அதைத் தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சீனிவாசனின் மரு மகனான குருநாத் மெய்யப்பன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யின் அதிகாரி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஒருவரை (பெயர் வெளியிடப் படவில்லை) தனது ஹோட்டல் அறையில் தொடர்ந்து சந்தித்துள் ளார். பிப்ரவரி 10 இடைக்கால அறிக்கையில் கூறியதுபோல, குருநாத் மெய்யப்பன் சம்பந்தப் பட்ட நபருடன் தொடர்பில் இருந்துள்ளது உறுதியாகிறது.

குருநாத் மெய்யப்பன், சூதாட் டக்காரர்களுடன் தொடர்பு கொள் வதற்காக அவருக்கு உதவி செய்த வருடன் பேசியுள்ளார். தடயவியல் அமைப்பால், குருநாத் மெய்யப்ப னின் குரல்மாதிரி உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால், சூதாட்டத் தில் அவர் ஈடுபட்டுள்ளது உறுதியா கிறது. ஆனால் அவர் மேட்ச் ஃபிக் ஸிங்கில் ஈடுபட்டது தொடர்பாக எவ்வித ஆதாரங்களும் இல்லை.

ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ராவுக்கு ஐபிஎல் சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு இருந்தது. ஆனால் அவர் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பில் இருந்ததை தெரியப்படுத்தாமல் இருந்ததால், பிசிசிஐ/ஐபிஎல் ஊழல் தடுப்பு விதிகளை மீறியுள்ளார். அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதும், பிசிசிஐ/ஐபிஎல் ஊழல் தடுப்பு விதிகளை மீறிய செயலாகும்.

சுந்தர் ராமனுக்கு, ஒரு சூதாட்டக் காரரைத் தெரியும். ஒரு சீஸனில் அவருடன் எட்டு முறை தொடர்பு கொண்டுள்ளார். சுந்தர் ராமனும் அந்தச் சூதாட்டக்காரருடனான தொடர்பு பற்றி ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அந்த நபர் சூதாட்டத்தில் ஈடுபட்டது பற்றி தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். குருநாத் மெய் யப்பனும் ராஜ் குந்த்ராவும் சூதாட்டத்தில் ஈடுபட்டது பற்றி தனக்குத் தகவல் வந்ததாகவும் ஆனால் இந்தத் தகவலைக் கொண்டு நடவடிக்கை எடுக்க இயலாது என்று ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவர் தெரி வித்ததாகவும் கூறியுள்ளார். தனக்கு வந்த தகவலை வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முத்கல் கமிட்டி அறிக்கை பற்றி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பிசிசிஐ இடைக்கால தலைவர் ஷிவ்லால் யாதவ், ‘‘மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுந்தர் ராமன் சூதாட்டக்காரருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிசிசிஐ யாரையும் விட்டுவைக்காது.” என்றார்.

பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக அதன் அவசர செயற்குழு, சென்னையில் இன்று கூடுகிறது. இதில் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்டவை குறித்தும், சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படும் என தெரிகிறது. பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்துக்கான புதிய தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்