இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: மே.இ.தீவுகள் அணியில் கெய்ல், சாமுவேல்ஸ்

By ராய்ட்டர்ஸ்

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான மே.இ.தீவுகள் அணியில் மீண்டும் அதிரடி வீரர்களான கிறிஸ் கெய்ல் மற்றும் மர்லன் சாமுவேல்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள மே.இ.தீவுகள் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் செப்.13-ம் தேதி அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக செப்.19 முதல் 29 வரை 5 ஒருநாள் போட்டிகளிலும் ஆடுகிறது.

இதற்கான மே.இ.தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அணியில் சுனில் நரைன், டேரன் மற்றும் டிவைன் பிராவோ ஆகியோர் இடம்பெறவில்லை.

மே.இ.தீவுகள் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கிறிஸ் கெய்ல் 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு தேசிய அணியில் இடம்பெறவில்லை. சாமுவேல்ஸும் கடந்த 1 ஆண்டாக அணியில் இடம்பெறவில்லை.

மே.இ.தீவுகள் அணி வருமாறு:

சுனில் ஆம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, மிகுவெல் கமின்ஸ், கிறிஸ் கெய்ல், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கைல் ஹோப், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், எவின் லூயிஸ், ஜேசன் மொகமது (துணைக் கேப்டன்), ஆஷ்லி நர்ஸ், ரோவ்மேன் போவெல், மர்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்