மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 232 ரன்கள் எடுத்தது. தீப்தி சர்மா, கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
இங்கிலாந்தின் டெர்பி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனைகளான பூனம் ராவத் 16, ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு தீப்தி சர்மா வுடன் இணைந்த கேப்டன் மிதாலி ராஜ் சிறப்பாக பேட் செய்தார்.
தீப்தி சர்மா 110 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் சேர்த்த நிலையில் காஞ்சனா பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்தது. மிதாலி ராஜ் 78 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்த நிலையில் ரனவீரா பந்தில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ஜூலன் கோஸ்வாமி 9, ஹர்மான்பிரித் கவுர் 20, வேதா கிருஷ்ணமூர்த்தி 29, சுஷ்மா வர்மா 11 ரன்கள் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் வீரக்கொடி 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதையடுத்து 233 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 41 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 4 விக்கெட்கள் இழப் புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. ஹன்சிகா 29, ஹசினி பெரேரா 10, ஜெயங்கனி 25, வர்தனே 37 ரன்களில் ஆட்டமிழந்தனர். சுரங்கிகா 31, காஞ்சனா 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago