உலகின் சிறந்த கால்பந்து அணி ஜெர்மனிதான் என்பதை இன்னொரு முறை அந்த அணி நிரூபித்தது. சிலியை 1-0 என்று வீழ்த்தி கான்பெடரேஷன் கோப்பையை முதன் முதலாக வென்றது.
ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 20வது நிமிடத்தில் சிலி நடுக்கள வீரர் மார்செலோ டயஸ் செய்த மிகப்பெரிய தவறினால் ஜெர்மனியின் லார்ஸ் ஸ்டிண்டில் கோலை அடிக்க இதுவே வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது.
ஆனால் இந்த ஆட்டம் இரு அணி வீரர்களுக்கிடையேயும் கடும் மோதல் போக்கையும் உடல் ரீதியான ஆக்ரோஷத்தையும் காட்டிய போட்டியாக அமைந்தது.
இளம், பரிசோதனையான ஒரு அணியை வைத்துக் கொண்டு கான்பெடரேஷன் கோப்பையை வென்றதன் மூலம் எந்த அணியாக இருந்தாலும் ஜெர்மனி ஒரு சிறந்த கால்பந்து தேசம் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்தது.
இரண்டாவது பாதியில் சிலி வீரர் கொன்சாலோ ஜரா, ஜெர்மனி வீரர் டைமோ வெர்னரின் முகத்தை தன் முழங்கையால் பதம்பார்த்தார், ஆனால் சிகப்பு அட்டைக்குப் பதிலாக மஞ்சள் அட்டையைக் காண்பித்தார் நடுவர். இவ்வாறு நடுவர் பிழைகள் ஏராளமாக இருந்தது இந்தப் போட்டியில். ஆனாலும் இத்தகைய ஹை வோல்டேஜ் போட்டியில் இதுவும் சகஜமே என்பதும் நமக்குப் புரிகிறது.
இறுதிப் போட்டியில் தொடக்கப் போராட்டங்களில் சிலியின் கை ஓங்கியிருந்தது. 3 பேர் கொண்ட ஜெர்மனி தடுப்பாட்டத்தை சிலி வீரர் அலெக்சிஸ் சான்சேஸ் அச்சுறுத்தினார். இவரும் ஆர்த்ரோ வைடாலும் அபாயக் கூட்டணி அமைத்து இளம் ஜெர்மனிக்கு கடும் சோதனைகளை அளித்தனர். நிறைய ஷாட்கள் கோலை நோக்கி அடிக்கப்பட்டது, முதல் 10-15 நிமிடங்களில் ஜெர்மனி கோல் வாங்காமல் இருந்தது ஆச்சரியமே.
ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் கோல் அடிக்க சிலிக்கு பொன்னான வாய்ப்பு கிட்டியது. ஜெர்மனி கோல் கீப்பர் ஸ்டீஜன், சிலி வீரர் வைடால் அடித்த நீண்ட தூர ஷாட்டை தட்டி விட அதனை படுவேகமாக வந்த சிலியின் வீரர் சான்சேஸ் கோலாக மாற்ற முடியவில்லை, அருகிலிருந்து அடித்தும் வெளியே அடித்தார் சான்சேஸ். இதனையடுத்து ஜெர்மனி கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்தியது. இந்த எதிர்த்தாக்குதலை சிலி அதன் முதற்கட்டத்தில் முறியடித்தது, ஆனால் நடுக்கள வீரர் மார்செலோ டயஸ் ஒரு பெரிய தவறு செய்தார், பந்தை நிறுத்தி தடுக்க முயற்சி செய்யாமல் குறுக்காகப் பாய்ந்தார் பந்து அவரது முயற்சிக்குச் சிக்கவில்லை, வெர்னர் பெனால்டி பகுதிக்குள் பந்தைச் சேகரிக்க இவர் பந்தை லார்ஸ் ஸ்டிண்டிலுக்கு அடிக்க அதற்குள் கோல் கீப்பர் கோலை விட்டுவிட்டு முன்னே வர காலியாக இருந்த கோலில் ஸ்டிண்டில் கோலை அடித்து ஜெர்மனிக்கு முன்னிலை கொடுத்தார். 4 ஆட்டங்களில் ஸ்டிண்டிலின் 3-வது கோலாகும் இது.
சிலி தொடர்ந்து ஆக்ரோஷமாக அச்சுறுத்திய் நிறைய முறை ஜெர்மனி கோல் அருகே சென்றது, ஆனால் அந்த பினிஷிங் டச் கிடைக்கவில்லை. ஆனால் எப்போதாவது சிலியின் கோல் பகுதிக்குள் ஜெர்மனி நுழைந்தாலும் உண்மையாகவே அச்சுறுத்தியது. டிராக்ஸ்லர் 40வது நிமிடத்தில் ஒருஷாட்டை வெளியே அடித்தார். இடைவேளைக்கு முன் லியான் கோரெஸ்ட்ஸ்கா இன்னொரு கோலை அடித்திருக்க வேண்டும்.
இரண்டாவது பாதியிலும் சிலியின் இதேவகையான பினிஷிங் டச் இல்லாத ஆக்ரோஷ ஆட்டம் தொடர்ந்தது, 83-வது நிமிடத்தில் சிலி பதிலி வீரர்கள் எட்சன் புக், மற்றும் ஆஞ்சேலோ சாகல் அருமையாகக் கூட்டணி அமைத்தனர், புக் ஒரு பந்தை மிக அருமையாக சாகலிடம் அளிக்க அருகில் கிடைத்த வாய்ப்பை சாகல் வீண் செய்தார்.
அதன் பிறகான ஆட்டம் சண்டை, சச்சரவுகள் நிரம்பியதாக மாறியது. வைடால், ஜொஷுவா கிம்மிக் ஆகியோர் புக் செய்யப்பட்டனர், ஒரு பந்தை மீட்க எம்ரே கேன் என்ற ஜெர்மனி பதிலி வீரர் மீது சிலி வீர்ர்கள் குமிய ஆட்டம் வன்முறைக்குச் சென்று விடும் அபாயம் ஏற்பட்டது. இந்தக்கூத்திற்கு இடையே சிலி வீரர் கிளாடியோ பிராவோ மஞ்சள் அட்டை பெற்றார்.
ஆட்ட உணர்வுகள் மதிக்கப்படவில்லையென்றாலும் கால்பந்தாட்டத்துக்கேயுரிய அந்த உணர்வுகளுடன் இந்தப் போட்டி நடைபெற்றது. ஜெர்மனி கான்பெடரேஷன் கோப்பையை வென்று 2018 உலகக்கோப்பைக்கான அஸ்திவாரத்தை நிலைநாட்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago