இந்தியா தொடர்ந்து வெற்றிபெறும் பட்சத்தில் வீரர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பேன்: பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உறுதி

By ஏஎஃப்பி

இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் பட்சத்தில், வீரர்களை அவர்கள் விருப்பப்படி சுதந்திரமாக இருக்க அனுமதிப்பேன் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே கடந்த மாதம் விலகினார். இந்திய வீரர்கள் சுதந்திரமாக தங்கள் இஷ்டப்படி இருக்க அனில் கும்ப்ளே அனுமதிக்கவில்லை, அவர்களிடம் கராறாக நடந்துகொண்டார் என்பது விராட் கோலி தரப்பின் குற்றச்சாட்டாக இருந்தது. அனில் கும்ப்ளே விலகியதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தனது பணியைத் தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது:

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்து வெற்றிகளை வசமாக்கும் பட்சத்தில் அவர்களிடம் கராறாக நடந்துகொள்ள வேண்டிய தேவை இல்லை. அவர்கள் விருப்பப்படி மகிழ்ச்சியாக வேடிக்கை விளையாட்டுகளுடன் சுதந்திரமாக இருப்பதில் தவறில்லை. எனவே அவர்கள் சுதந்திரமாக இருக்க அனுமதிப்பேன். வீரர்களிடம் அதிகாரத்தைக் காட்டுவதை விட அவர்களுடன் இணைந்து செயல்படுவதே நல்ல முடிவுகளைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன். இந்திய வீரர்களுக்கு எப்படி விளையாடவேண்டும் என்று பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக இருப்பதை விட, அவர்களின் ஆட்டத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்து, அவர்களின் திறமையை மேம்படுத்தும் வழிகாட்டியாக இருப்பேன்.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்