இந்திய கிரிக்கெட் பயணத்தை பாதியிலேயே கைவிட்டதன் காரணமாக மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ரூ,250 கோடி இழப்பீடு கோரியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
இது குறித்து பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் கூறும் போது, "மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.250 கோடி இழப்பீடு கோரி கடிதம் அனுப்பியுள்ளோம். தொடரைக் கைவிட வேண்டாம், அவர்கள் நெருக்கடியிலிருந்து மீள நாங்கள் உதவுகிறோம் என்று பலமுறை கேட்டுக் கொண்டும் தொடரை பாதியிலேயே கைவிட்டனர்” என்றார்.
இந்த இழப்பீடு தொகை குறித்து மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்க 2 வாரங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், முடிவெடுக்கவில்லையெனில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிசிசிஐ எச்சரித்ததாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போதுள்ள கிரிக்கெட் வாரியங்களிலேயே நிதி நிலையில் மிகவும் மோசமாக உள்ள கிரிக்கெட் வாரியம் மேற்கிந்திய வாரியம்தான். இப்படியிருக்கையில் அவர்கள் எப்படி ரூ.250 கோடி இழப்பீடு தொகை அளிக்க முடியும் என்று சஞ்சய் படேலிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இதற்கு பிசிசிஐ ஒன்றும் செய்ய முடியாது. எப்படியிருந்தாலும் இந்தத் தொகையை அவர்கள் கொடுத்தேயாக வேண்டும்.
தொடரிலிருந்து விலகிய போது எங்களிடம் அனுமதி கேட்டார்களா என்ன?” என்று பதிலுரைத்தார் சஞ்சய் படேல்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago