புவனேஷ்வரில் நடைபெற உள்ள ஆசிய தடகள போட்டியில் கலந்து கொள்ளும் 95 பேர் கொண்ட அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 22-வது ஆசிய தடகள போட்டி வரும் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெறு கிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 95 பேர் அடங்கிய அணி கலந்துகொண்டு விளையாட உள்ளது.
இந்திய தடகள சம்மேளனத் தலைவர் அடில் சுமரிவாலா கூறும் போது, “கடந்த முறை சீனாவின் வூகான் நகரில் நடைபெற்ற தொடரில் இந்தியா 13 பதக்கங்கள் வென்றது. தற்போது அதைவிட அதிக அளவில் பதக்கங்களை இந்திய அணி வெல்லும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஏற்கெனவே திறமையை நிரூபித்துள்ளவர்களும், அற்புத மான புதிய திறன்களைக் கொண்ட வர்களும் அணியில் உள்ளனர். டூட்டி சந்த், சரபானி நந்தா, அமியா குமார் மாலிக் ஆகியோர் பதக்க மேடையை அலங்கரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, வீராங்கனை அனு ராணி, நீளம் தாண்டுதல் விரர் அங்கித் சர்மா, ஸ்டீபில்சேஸ் வீராங்கனை சுதா சிங், 4x400 மீட்டர் மகளிர் ரிலே அணியை சேர்ந்த நிர்மலா ஆகியோர் மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.
அணி விவரம்:
ஆடவர் பிரிவு: அமியா குமார் மாலிக் (100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம்), முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், ஆரோக்ய ராஜீவ் (400 மீட்டர் ஓட்டம்), ஜின்சன் ஜான்சன், விஷாம்பர் கெல்கர் (800 மீட்டர் ஓட்டம்), அஜெய் குமார் சரோஜ், சித்தாந்தா ஆதிகரி (1500 மீட்டர் ஓட்டம்), லட்சுமணன், முரளி குமார் காவித் (5 ஆயிரம் மீட்டர் ஓட்டம்), லட்சுமணன், கோபி தோனாகல், காலிதாஸ் ஹிராவே (10 ஆயிரம் மீட்டம் ஓட்டம்), நவீன் குமார், துர்கா பகதூர் புத்தா (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஸ்), சித்தாந் திங்கலயா, பிரேம் குமார் (110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), ஜபிர், சந்தோஷ் குமார், துர்கேஷ் குமார் பால் (400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்).
சிவா (போல் வால்ட்), சேத்தன், அஜெய் குமார் (உயரம் தாண்டுதல்), அங்கித் சர்மா, சம்ஷீர், சித்தார்த் மோகன் நாயக் (நீளம் தாண்டுதல்), அர்பிந்தர் சிங், கார்த்திக் (டிரிப்பிள் ஜம்ப்), தஜிந்தர் பால், ஜஸ்தீப் திங் திலான், ஓம் பிரகாஷ் ஹர்கனா (குண்டு எறிதல்), விகாஷ் கவுடா, தர்மராஜ் யாதவ், கிர்பால் சிங் (வட்டு எறிதல்), நீரஜ் குமார் (சங்கிலி குண்டு எறிதல்), நீரஜ் சோப்ரா, தவிந்தர் சிங் கங், அபிஷேக் சிங் (ஈட்டி எறிதல்).
ஜக்தர் சிங், அபிஷேக் ஷெட்டி (டெக்கத்லான்), அமியா குமார் மாலிக், ஜோதி சங்கர் தீப்நாத், அனுரூப் ஜான், இலக்கிய தாசன், பிரவீன் முத்து குமரன், சிந்தா சுதாகர் (4x100 மீட்டர் ரிலே), முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், ஆரோக்கிய ராஜீவ், சச்சி ராபி, மோகன் குமார், முகமது (4x400 மீட்டர் ரிலே).
மகளிர் பிரிவு:
டூட்டி சந்த், சரபானி நந்தா (100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம்), நிர்மலா, பூவம்மா, ஜிஸ்னா மேத்யூ (400 மீட்டர் ஓட்டம்), டுன்டி லூக்கா, அர்ச்சான ஆதவ், லில்லி தாஸ் (800 மீட்டம் ஓட்டம்), மோனிகா சவுத்ரி (1500 மீட்டர் ஓட்டம்), சூரியா, சஞ்ஜீவானி ஜாதவ் (5 ஆயிரம் மீட்டர் ஓட்டம்), சூரியா, சஞ்ஜீவானி ஜாதவ், மீனு (10 ஆயிரம் மீட்டர் ஓட்டம்), சுதா சிங், பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஸ்), நயானா ஜேம்ஸ் (100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), அனு, ஜாவுனா முர்மு, அர்பிதா (400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்).
சங்கீதா (போல் வால்ட்), சஹானா குமார், சுவப்னா பர்மான் (உயரம் தாண்டுதல்), நயானா ஜேம்ஸ், நீனா, கார்த்திகா (நீளம் தாண்டுதல்), ஷீனா, ஜாலின் முரளி லோபா (டிரிப்பிள் ஜம்ப்), மன்பிரித் கவுர், அனாமிகா தாஸ், ராமன்பிரித் கவுர் (குண்டு எறிதல்), கமால்பிரித் கவுர் பால், சீனா பூனியா, ஹிமானி சிங் (வட்டு எறிதல்), சரிதா ஆர்.சிங், கன்ஜன் சிங் (சங்கிலி குண்டு எறிதல்), அனு ரானி, பூனம் ராணி சிங், சுமன் தேவி (ஈட்டி எறிதல்), சுவப்னா பர்மான், பூர்னிமா, லிஸ்கி ஜோசப் (ஹெப்டத்லான்).
டூட்டி சந்த், சரபானி நந்தா, மெர்லின் ஜோசன், ரீனா ஜார்ஜ், ருமா சர்கார், ஹிமா ராய் (4x100 மீட்டர் ரிலே), நிர்மலா, பூவம்மா, ஜிஸ்னா மேத்யூ, விஜயகுமாரி, சரிதா பென் கெய்க்வாட், தீபஸ்ரீ மஸூம்தார் (4x400 மீட்டர் ரிலே).
இவர்களில் நயானா ஜேம்ஸ், ஜாலின் முரளி லோபோ, விகாஷ் கவுடா, சித்தார்த் மோகன் நாயக், கார்த்திக், சித்தாந் திங்கலயா ஆகியோருக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்பட உள்ளது. இதில் இவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிய தடகள போட்டி யில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago