2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 1-0 என்று தோல்வியைத் தழுவி கோப்பை வாய்ப்பை நழுவ விட்டது, 2015 கோப்பா அமெரிக்கா இறுதியில் இதே சிலி அணியிடம் பெனால்டியில் தோல்வி அடைந்து கோப்பை வாய்ப்பை நழுவ விட்டது மட்டுமல்ல... 2007 கோப்பா அமெரிக்காவின்போதும் மெஸ்ஸி இறுதிப் போட்டி தோல்வியைக் கண்டார்.
இதனால்தான் அவர் "நான் அனைத்தையும் செய்து பார்த்து விட்டேன், 4 இறுதிப் போட்டிகளில் இருந்தும் சாம்பியன் ஆக முடியவில்லை, இது எனக்கும் அணிக்கும் கடினமான தருணம். அர்ஜென்டினாவுக்கு ஆடுவது என்பது முடிந்துவிட்டது" என்று வெறுப்புடன்தான் விடைபெற்றுள்ளார்.
கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியைத் தழுவியதாலும், பெனால்டி ஷூட் அவுட்டில் தன்னால் கோல் அடிக்க முடியாமல் போன வெறுப்பினாலும் சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ள அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியின் மகத்துவம் சொல்லும் 10 தகவல்கள் இதோ...
* 1986 உலகக் கோப்பையில் 'ஹேண்ட் ஆஃப் காட்' கோல் அடித்த சூப்பர் ஸ்டார் டீகோ மரடோனா விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப வந்தவர் லயோனல் மெஸ்ஸி. சில வேளைகளில் மரடோனாவை விடவுமே மெஸ்ஸி சிறந்த ஆட்டக்காரர் என்று நிபுணர்களால் விதந்தோதப்பட்டது.
* ரொசாரியோவில் 1987 ஆம் ஆண்டு பிறந்த லயோனல் மெஸ்ஸியின் ஆரம்ப காலக்கட்டம் அவருக்கு ஏற்பட்ட ஹார்மோன் பிரச்சினையால் சிக்கலுக்குள்ளானது. அவருக்கு அப்போது வயது 13. அதிக செலவுபிடிக்கும் இந்த மருத்துவத்துக்காக மெஸ்ஸியின் பெற்றோர்கள் ஸ்பெயினில் குடிபுகுந்தனர். அப்போதுதான் பார்சிலோனா கிளப் மெஸ்ஸிக்கு உதவ முன் வந்தது. மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்து அவரது மருத்துவச் செலவையும் ஏற்றுக் கொண்டது. அவரது உடல் நலம் நன்கு தேற பார்சிலோனா கிளப் இவரிடம் அரிய கால்பந்து திறமையை கண்டது.
* தனது 17-வது வயதில் 2004-ம் ஆண்டு முதல் டிவிஷன் போட்டியில் இஸ்பான்யாலுக்கு எதிராக முதல் போட்டியில் அறிமுகமானார் மெஸ்ஸி. அன்று முதல் பார்சிலோனாவின் வளர்ப்புப் பிள்ளையாகவே மெஸ்ஸி பார்க்கப்படுகிறார்.
* 2008-09 ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருது பெற்றார். 5 முறை சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருது பெற்றார் மெஸ்ஸி.
* 3 சாம்பியன்ஸ் லீக் இறுதிகளில் 2-ல் கோல் அடித்து வெற்றி பெறச் செய்ததையடுத்து, 'அனைத்துக் கால சிறந்த வீரர்' மெஸ்ஸி என்ற பெயர் பெற்றார்.
* மார்ச் 2012-ல் பார்சிலோனா அணிக்காக அதிக கோல் அடித்த வீரரானார் மெஸ்ஸி. சீசர் ரோட்ரிக்ஸ் சாதனையான 231 கோல்களைக் கடந்து மெஸ்ஸி 232 கோல்களை அடித்து சாதனை நிகழ்த்தினார்.
* அர்ஜென்டினா அணிக்காக இவர் முதலில் களமிறங்கியது ஹங்கேரிக்கு எதிராக. இடைவேளைக்கு பிறகு 18 நிமிடங்கள் கழித்து இறங்கிய மெஸ்ஸி 47 வினாடிகள் ஆடிய பிறகு வெளியே அனுப்பப்பட்டார்.
* அர்ஜென்டினா அணிக்காக 55 கோல்களை 112 போட்டிகளில் அடித்து அதிக கோல்களுக்கான சாதனையை தன் வசம் வைத்துள்ளார். லா லீகாவில் ஒரே சீசனில் 50 கோல்கள் அடித்த சாதனையையும், ஒரு ஆண்டில் 91 கோல்கள் அடித்த சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார் மெஸ்ஸி.
* இளைஞர் கால்பந்தாட்டத்தில் 2005 ஃபிபா இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியை அர்ஜெண்டினாவுக்காக வென்று கொடுத்தார். இந்தத் தொடரில் சிறந்த வீரர் விருதையும் அதிக கோல்கள் அடித்த சாதனையையும் நிகழ்த்தினார் மெஸ்ஸி.
* 2008 சம்மர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல காரணமானார். இடது காலில் மந்திரச் சக்தியை வைத்திருப்பவர் என்று கருதப்படுவதால் மாரடனாவின் வாரிசாக உருவகிக்கப்பட்டார்.
உலகம் முழுதும் கால்பந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திர நாயகன் மெஸ்ஸி ஓய்வு அறிவித்திருப்பது, சர்வதேச கால்பந்துக்கு ஒரு பேரிழப்பு என்றே கூற வேண்டும்!
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago