முதல் இருபது ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுத் தந்ததுடன், 20 ஓவர் போட்டியின் முடிவை ஒரே ஓவரில் மாற்றிவிடும் அதிரடியான பேட்டிங் மூலம் புகழ் பெற்றவர் கேப்டன் தோனி.
தொடர்ந்து 5-வது இருபது ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை வகிக்க இருக்கும் தோனி, இதுவரை ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை என்பது ஆச்சரியமான உண்மை.
இந்திய அணி இதுவரை 46 இருபது ஓவர் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் தோனி 43 போட்டிகளில் விளையாடி 772 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 32.16. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததே 20 ஓவர் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ரன்.
20 ஓவர் கிரிக்கெட்டில் தோனி 5 அல்லது 6-வது பேட்ஸ்மேனாகவே களமிறங்குவார். எனவே அவர் ஒருசில ஓவர்களையே எதிர்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவே அவர் அரைசதம் எட்ட முடியாததற்கு முக்கியக் காரணம். எனினும் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓர் அரைசதம் கூட எடுக்காமல் 772 ரன்களை எட்டியுள்ளதும் ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது.
இப்போது நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பையில் தோனி அரை சதம் எடுக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago