மணீஷ் பாண்டே அபார சதம் வீண்: 322 ரன்களை விரட்டி 1 ரன்னில் இந்தியா ஏ தோல்வி

By இரா.முத்துக்குமார்

மணீஷ் பாண்டேயின் அபார சதமும், சஞ்சுவின் அதிரடி ஆட்டமும் வீணாக ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா ஏ போராடி 1 ரன்னில் தோல்வி கண்டது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 4 அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா ஏ போராடி 1 ரன்னில் தோல்வி கண்டது.

நாற்தரப்பு தொடரின் 11-வது ஆட்டமான இந்தப் போட்டியில் இன்று கேப்டன் மணீஷ் பாண்டே 82 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 100 ரன்களை எட்டினார், பிறகு 91 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் எடுத்து 47-வது ஓவரில் ஆட்டமிழந்தார், இவரும் ஹர்திக் பாண்டியாவும் ஒரே ஓவரில் அவுட் ஆக அதிரடி காட்டிய சஞ்சு சாம்சனிடம் வெற்றிப்பொறுப்பு விழுந்தது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் 4 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தனர். 49.5-வது ஓவரில் சாம்சன் அவுட் ஆக கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் டை-யிற்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜெயந்த் யாதவ் 2-வது ரன்னிற்காக முயற்சி செய்து 1 ரன்னை மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆனார். இதனால் வலிநிறைந்த 1 ரன் தோல்வியில் முடிந்தது இந்தியா ஏ.

சஞ்சு சாம்சன் 74 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 87 ரன்கள் விளாசினார். முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியா ஏ அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஸ்டாய்னிஸ் 10 பந்துகள் ஆடி ரன் எடுக்க முடியாத நிலையில் தாக்குர் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறிய போது ஆஸ்திரேலியா ஏ 16/1 என்று இருந்தது.

ஆனால் அதன் பிறகு ஜோடி சேர்ந்த கே.ஆர்.பேட்டர்சன், மேடின்சன் ஆகியோர் இருவருமே ஆட்டத்தின் போக்கை மாற்றினர், இருவருமே சதம் எடுத்து 35 ஓவர்களில் 230 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். வருண் ஆரோன் இவர்களிடம் சிக்கி சின்னாபின்னமானார், ஆரோன் 7 ஓவர்களில் 65 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

பேட்டர்சன் 123 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் எடுக்க, மேடின்சன் 117 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் ஆக்ரோஷமாக 118 ரன்களைக் குவித்தார். ஜெய்தேவ் உனட்கட், தாக்குர், ஹர்திக் பாண்டியா, வருண் ஆரோன் அடங்கிய இந்திய வேகப்பந்து வீச்சு சரியாக அமையவில்லை, மொத்தம் 24 உதிரிகளில் 8 வைடுகள் 5 நோபால்கள் வீசப்பட்டன.

மணீஷ் பாண்டே, மந்தீப் சிங், சஞ்சு சாம்சன் அபாரம்:

323 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியில் ஃபாசல், மந்தீப் சிங் தொடங்கினர். டிரெமெய்ன் வீசிய 5-வது ஓவரில் மந்தீப் சிங் தனது முதல் சிக்சரை அடித்தார். அடுத்த ஓவரில் 12 ரன்கள் எடுத்த ஃபாசல், வொராலிடம் வீழ்ந்தார். ஸ்ரேயஸ் ஐயர் 2 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிசிடம் அவுட் ஆனார். 14.2 ஓவர்களில் 68/2 என்ற நிலையில் கேப்டன் மணீஷ் பாண்டே களம் கண்டார். இறங்கியவுடனேயே பவுண்டரி அடித்தார்.

இந்நிலையில் 19-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீச மந்தீப் சிங் 1 பவுண்டரியையும், மணீஷ் பாண்டே 2 பவுண்டரிகளையும் அடித்தனர். மந்தீப் சிங் 50 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சருடன் அரைசதம் கண்டு 56 ரன்களில் பாய்ஸிடம் எல்.பி ஆகி வெளியேறினார். 23 ஓவர்கள் முடிவில் இந்தியா ஏ 113/3, வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 7.77 என்று உயர்ந்தது. கேதர் ஜாதவ் அருமையான 3 பவுண்டர்களுடன் 20 ரன்கள் எடுத்து பாய்ஸ் பந்தில் அவுட் ஆனார். கேமரூன் பாய்ஸ் லெக் பிரேக் பவுலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதுதான் சாம்சன், பாண்டேயுடன் இனைந்தார். 30 ஓவர்களில் 162/4 என்ற நிலையில் அடுத்த 20 ஓவர்களில் 161 ரன்கள் வெற்றிக்குத் தேவை, பிரசித்தமான டி20 நிலைமைதான். பாண்டே அப்பொது 39 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39-ல் இருக்க, சஞ்சு 12 ரன்களில் இருந்தார்.

32-வது ஓவரில் அதிரடி தொடங்கியது, சஞ்சு வொரால் என்ற வேகப்பந்து வீச்சாளரை சிக்ஸ் பவுண்டரி அடிக்க, பாண்டேயும் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரை லெக் பிரேக் பவுலர் பாய்ஸ் வீச மணீஷ் பாண்டே ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். இதில் 47 பந்துகளில் அரைசதம் கண்டார் பாண்டே, அரைசதம் எட்டிய பிறகுதான் சிக்ஸ், பவுண்டரி அடித்தார். 39-வது ஓவரில் ஒரு பவுண்டரி, 2 ரன்னுடன் சஞ்சு 40 பந்துகளில் அரைசதம் கண்டார்.

கடைசி 10 ஓவர்களில் 67 ரன்கள் என்ற வெற்றி சாத்திய நிலைக்கு வந்தது இந்தியா ஏ. 19.4 ஓவர்களில் அதாவது 118 பந்துகளில் மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன் ஜோடி 157 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்து வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தனர். அருமையான அதிரடி ஆட்டமாக இது அமைந்தது. 47-வது ஓவரில் பாண்டே 110 ரன்களில் ஆட்டமிழக்க, பாண்டியா ரன் அவுட் ஆக, கடைசி ஓவரில் சாம்சன் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார், இதனால் 1 ரன்னில் இந்தியா ஏ போராடி தோல்வி தழுவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்