ஐசிசி விருதுகள்: 2014-ன் சிறந்த வீரராக மிட்சல் ஜான்சன் தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்த ஆண்டுக்கான ஐசிசி விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. முக்கிய விருதுகள் எதையும் இந்திய வீரர்களில் ஒருவர் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன், ஐசிசி சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் மற்றும் இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ஆகிய இரண்டு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டிற்கான மக்கள் விருப்ப விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மேலும் ஐசிசி ஒருநாள் அணியில் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அணிக்கு தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விருது பெற்றவர்கள் விவரம்:

ஐசிசி சிறந்த ஒருநாள் போட்டி வீரர் - டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா)

ஐசிசி சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் - மிட்சல் ஜான்சன் (ஆஸ்திரேலியா)

ஐசிசி மக்கள் விருப்பம் - புவனேஸ்வர் குமார் (இந்தியா)

ஐசிசி இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் - மிட்சல் ஜான்சன் (ஆஸ்திரேலியா)

ஐசிசி இந்த ஆண்டிற்கான ஒருநாள் அணி

ஹஃபீஸ், டி காக், விராட் கோலி, ஜார்ஜ் பெய்லி, டி வில்லியர்ஸ், மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டுவைன் பிராவோ, ஃபால்க்னர், டேல் ஸ்டெய்ன், முகமது ஷமி, மெண்டிஸ், ரோஹித் சர்மா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்