ஒலிம்பிக் பாட்மிண்டன்: சீன ஜாம்பவானுக்கு எதிராக கடுமையாகப் போராடி கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி

By ஆர்.முத்துக்குமார்

ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் காலிறுதியில் சீன வீரர் லின் டானிடம் போராடி 3 செட்களில் நெருக்கமாக வந்து தோல்வி தழுவினார் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்.

உலகின் நம்பர் 3 வீரரும் இருமுறை ஒலிம்பிக் சாம்பியனுமான லின் டான் கடைசியில் 21-6, 11-21, 21-18 என்று வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

முதல் செட்டில் சர்வைத் தொடங்கிய கிடாம்பி ஸ்ரீகாந்த் ஒரு ஸ்மாஷ் மூலம் அருமையாக முதல் புள்ளியைப் பெற்றதோடு சரி, அதன் பிறகு லின் டான் ஆடிய ஆட்டம் ஸ்ரீகாந்துக்கு ஏதோ கனவில் ஆடுவது போல்தான், ஸ்ரீகாந்த் அடித்த ஒவ்வொரு ஸ்மாஷ், லாப் ஆகியவற்றை அருமையாக எடுத்து ரிடர்ன் செய்து அசத்தி 11-1 என்று முன்னிலை பெற்றார். அதிலிருந்து முதல் செட்டில் மீள முடியவில்லை. 21-6 என்று லின் டான் கைப்பற்றினார். 16 நிமிடங்களில் முதல் செட் முடிந்தது.

இவரை எப்படி வீழ்த்த முடியும், மேஜிக்கல் பாட்மிண்டனாக இருக்கிறதே என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கையில், ஸ்ரீகாந்த் 2-வது செட்டில் தன் ஆட்டத்தின் வேகத்தைச் சற்றே கூட்டி லின் டானுக்கு ஸ்மாஷ் செய்யும் வாய்ப்பையும் எளிதாக லாப் செய்யும் வாய்ப்பையும் குறைத்தார், தள்ளித் தள்ளி அடித்தார், பந்தை உயரமாக எழுப்பி ஸ்மாஷ் வாய்ப்ப்பு கொடுக்காமல் பக்கவாட்டில் அதிகம் அடித்தார்,

இதனால் 2-வது செட்டில் 3-0 என்று முன்னிலை பெற்றார். பிறகு லின் டான் சிலபல தவறுகளைச் செய்ய தூண்டப்பட்டார், இதனால் ஸ்ரீகாந்த் 6-2 என்று முன்னிலை பெற்றார். பிறகு நல்ல தடுப்பு உத்தியுடன் லின் டானுக்கு சில கடினமான கோணங்களை எழுப்பி அவர் தனக்கு வாகாக ஆடுமாறு செய்து அருமையான ஸ்மாஷ்களை லின் டானின் இடதுபுறம் அடிக்க அவரால் ஒன்றைக்கூட அடிக்க முடியவில்லை, இதனையடுத்து 9-5 என்றும் 11-5 என்றும் 13-7 என்றும் முன்னேறினார் ஸ்ரீகாந்த்.

இதன் பிறகு லின் டானை பின்னுக்குத் தள்ளி அவருக்கு உயரமாக இறகுப்பந்தை கொடுத்து ஷாட்டில் துல்லியமில்லாமல் செய்தார் ஸ்ரீகாந்த் இதனால் விறுவிறுவென 18-10 என்று முன்னிலை பெற்ற ஸ்ரீகாந்த் சற்றும் எதிர்பாராமல் 21-11 என்று வென்று லின் டானுக்கு அதிர்ச்சியளித்தார்.

உண்மையில் மிகப்பெரிய போராட்ட எழுச்சி என்றால் மிகையாகாது, இதே உத்வேகம் நிச்சயம் ஸ்ரீகாந்துக்கு அரையிறுதி நுழைவு வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் 3-வது செட் தொடங்கியது. ஆனால் தொடக்கத்திலேயே ஸ்ரீகாந்த் சில அன் ஃபோர்ஸ்டு பிழைகளைச் செய்ய லின் டான் 3-1 என்று முன்னிலை பெற்றார். ஒரு அருமையான ரேலியில் லின் டான் வெல்ல 5-3 என்று அவர் முன்னிலை பெற்றார், அப்போது உத்வேகம் பெற்று ஆடிய ஸ்ரீகாந்த் மீண்டும் 2-வது செட் போலவே நெட் பக்கத்தில் அருமையாக ஆடி அவரைத் தவறு செய்ய வைத்து 6-6 என்று சமன் செய்தார். பிறகு 7-7 என்று சரிசமமாகச் சென்று அவருக்கு நெருக்கடி கொடுத்தார்.

அதன் பிறகு ஸ்ரீகாந்த் மீண்டும் லின் டானை பின்னுக்குத் தள்ளி சில அபாரமான கிராஸ்களை லின் டானுக்கு வலது புறமும் இடது புறமும் அடிக்க லின் டான் தவறுகளை இழைத்தார், அல்லது அவரது ரிடர்ன் முயற்சிகள் தோல்வியடைய 11-8 என்று முன்னிலை பெற்றார். கடைசியில் லின்டான் வலைக்கருகே தவறிழைக்க ஸ்ரீகாந்த் 13-10 என்று முன்னிலை பெற்றார்.

இந்நிலையிலிருந்து கோட்டை விட்ட ஸ்ரீகாந்த் முதலில் இரண்டு லாங் ஷாட்களை வெளியே அடித்தார், இரண்டு வலைக்கருகான ஷாட்களை வலையின் மீது அடித்தார். மேலும் ஒரு ரிடர்ன் மோசமாக அமைய லின் டான் 17-15 என்று முன்னிலை பெற்றார். இந்நிலையிலும் விட்டுக் கொடுக்காத ஸ்ரீகாந்த் ஒரு ஸ்மாஷ் ஷாட் ஆடி 16-17 என்று நெருங்கினார். ஆனால் லின் டான் இங்குதான் தனது பதற்றமில்லாத ஆட்டத்தை ஆடி ஸ்ரீகாந்தை தவறிழைக்க வைத்தார்.

ஆனால் நம்பமுடியாத அளவுக்கு லின் டான் தனது லாப்களை அருமையாக ஆட 19-16 என்று முன்னிலை பெற்றார், ஸ்ரீகாந்த் மேலும் இருமுறை வலையத்தாக்கினார். கடைசியிலும் ஒரு ஸ்மாஷை நெட்டில் அடித்தார் ஸ்ரீகாந்த் 18-21 என்று மூன்றாவது செட்டை இழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்