ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்

By ஏஎஃப்பி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு ஜோகோவிச், ரபேல் நடால், செரினா வில்லியம்ஸ் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றன.

பெண்கள் பிரிவில் நடந்த முதல் சுற்று போட்டியில் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சுவிட்சர்லாந்து வீராங்கனையான பெலிண்டா பென்கிக்கை எதிர்த்து ஆடினார். 23-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் மெல்போர்னில் களமிறங்கிய செரீனா வில்லியம்ஸ், போட்டியின் ஆரம்பம் முதலே ஆவேசமாக ஆடினார். செரீனாவின் ஆட்டத்தைக் காண அவரது வருங்கால கணவரான அலெக்சிஸ் ஒஹானியன் வந்திருந்தார்.

முதல் செட் போட்டியில் செரீனா வில்லியம்சுக்கு சவால் விடும் வகையில் பெலிண்டா ஆடினார். இருப்பினும் செரீனாவின் அனுபவத்துக்கு முன்னால் அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் போராடி வென்ற செரீனா அடுத்த செட்டை 6-3 என்ற கணக்கில் மிக எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 6-4, 6-3 என்ற நேர்செட்களில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இப்போட்டி குறித்து நிருபர்களிடம் கூறிய செரீனா வில்லியம்ஸ், “நான் ஆடிய முதல் சுற்று போட்டிகளிலேயே இது சற்று கடினமாக இருந்தது. இப்போட்டியில் பெலிண்டா மிகச் சிறப்பாக ஆடினார்” என்றார். 2-வது சுற்றுப் போட்டியில் அவர் செக் நாட்டு வீராங்கனையான லூசி சபரோவாவை எதிர்த்து ஆடவுள்ளார். முன்னதாக நடந்த மற்றொரு போட்டியில் லூசி சபரோவா 3—6, 7—6, 6—1 என்ற செட்கணக்கில் பெல்ஜியம் வீராங்கனையான யானினாவை போராடி வீழ்த்தினார்.

பெண்கள் பிரிவில் நடந்த மற்றொரு முதல் சுற்று போட்டியில் செக் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, ஸ்பெயினின் சாரா சோரிபஸை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-0 என்ற செட்கணக்கில் எளிதாக வென்றார். பெண்களுக்கான பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று போட்டிகளில் எலினா வாஸ்னினா, நவோமி ஒசாகா, யூலியா புடின்சேவா, பார்போரா ஸ்டிரைகோவா ஆகியோரும் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

நடால் வெற்றி

ஆண்கள் பிரிவில் நடந்த முதல் சுற்று போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரபேல் நடால், ஜெர்மனியின் புளோரின் மேயரை எதிர்த்து ஆடினார். 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவரான ரபேல் நடால், காயம் காரணமாக கடந்த ஆண்டு டென்னிஸ் போட்டிகளில் பெரிதாக எதையும் சாதிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு அவர் எப்படி ஆடுவார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், நடால் நேற்று தனது பழைய துறுதுறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்பம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய நடால், 6—3, 6—4, 6—4 என்ற செட்கணக்கில் புளோரின் மேயரை வீழ்த்தினார்.

இப்போட்டி குறித்து நிருபர்களிடம் கூறிய நடால், “முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு ஷாட்டையும் நான் மிகவும் கவனமாக ஆடினேன்” என்றார். 2-வது சுற்று ஆட்டத்தில் மார்கோஸ் பாக்தாதிஸை எதிர்த்து அவர் ஆடவுள்ளார்.

மற்றொரு போட்டியில் உலகின் 3-ம் நிலை வீரரான மிலோஸ் ரோனிக் 6—3, 6—4, 6—2 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் டஸ்டின் பிரவுனை வென்றார். 2-ம் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் ஜோகோவிக், நடந்த முதல் சுற்று போட்டியில் 6-1, 7-6, 6-2 என்ற செட்கணக்கில் ஸ்பெயின் வீரர் வெர்டாஸ்கோவை வீழ்த்தினார். ஆடவர் பிரிவில் நடந்த மற்ற போட்டிகளில் மார்கோஸ் பாக்தாதிஸ், கில்ஸ் சைமன், கில்ஸ் முல்லர், டோமினிக் தீம், டேவிட் கோஃபின் ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்