டைட்டன்ஸ் த்ரில் வெற்றி

By செய்திப்பிரிவு

சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் டைட்டன்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பென் ஹீட் அணியைத் தோற்கடித்தது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக 45 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பிரிஸ்பென் ஹீட் கேப்டன் ஜேம்ஸ் ஹோப்ஸ், டைட்டன்ஸ் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார்.

தொடக்க ஆட்டக்காரர் ருடால்ப் 1 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹென்றி டேவிட்ஸுடன் இணைந்தார் ஹெய்னோ குன். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. 27 பந்துகளைச் சந்தித்த ஹெய்னோ குன் 6 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட்ஸ் 31 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார்.

அப்போது 10.4 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்திருந்தது டைட்டன்ஸ் அணி. பின்னர் வந்தவர்களில் டிவில்லியர்ஸ் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்டினார். 19 பந்துகளைச் சந்தித்த அவர் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், முன்வரிசை வீரர்கள் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தியபோதும், அந்த அணியால் வலுவான இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் 18.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு சுருண்டது டைட்டன்ஸ். கடைசி 6 ஓவர்களில் மட்டும் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்தது.

பிரிஸ்பென் தரப்பில் மேத்யூ கேல் 2.5 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 19-வது ஓவரை வீசிய கேல், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஆடிய பிரிஸ்பென் அணியில் ஜோ பர்ன்ஸ் ரன் ஏதுமின்றியும், பீட்டர் போரஸ்ட் 8 ரன்களிலும், பென் கட்டிங் ரன் ஏதுமின்றியும் நடையைக் கட்ட 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து ஜேம்ஸ் ஹோப்ஸுடன் இணைந்தார் டேனியல் கிறிஸ்டியான். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்க்க, பிரிஸ்பென் ஓரளவு சரிவிலிருந்து மீண்டது. கிறிஸ்டியான் 24 பந்துகளில் 1 சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பிரிஸ்பெனின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 41 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் 17-வது ஓவரின் முதல் பந்தில் ஜேம்ஸ் ஹோப்ஸ் (44 பந்துகளில் 37 ரன்கள்) ஆட்டமிழக்க, பிரிஸ்பெனுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் சபர்க் அதிரடியாக விளையாடி, ஆட்டத்தின் போக்கை மாற்ற முயன்றார். ஆனால் கடைசி ஓவரின் முதல் பந்தில் சபர்க் 19 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் 119 ரன்களுக்கு சுருண்டது பிரிஸ்பென்.

டைட்டன்ஸ் தரப்பில் டி லாஞ்ஜி 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்