ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை அபாரமாக வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-2 என்று பாகிஸ்தான் சமன் செய்ததையடுத்து தன் அணி முதலிடம் பெற தகுதி வாய்ந்ததே என்று பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவை இலங்கை 2-0 என்று வீழ்த்துவதும், மே.இ.தீவுகள் இந்தியாவுக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயின் டெஸ்ட் போட்டியை டிரா செய்வதும் நிகழ்ந்தால் பாகிஸ்தான் முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும். இதுவரை 2-ம் இடமே அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி பிடித்துள்ளது.
இந்நிலையில் முழுதும் பாகிஸ்தானில் ஆடாமல் துபாய் என்று நடுநிலை மைதானங்களில் ஆடும் பாகிஸ்தான் அணி உள்ளூ ரசிகர்களின் உற்சாக ஆதரவின்றியே முதலிடம் பிடிக்குமானால் அதற்கு அந்த அணி தகுதியானதே என்று மிஸ்பா கூறியுள்ளார்.
“தாய்நாட்டில் 6 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடாமல் இருக்கும் பாகிஸ்தான் அணி முதலிடம் பெற தகுதியானதே. துபாயில் விளையாடுவது அணிக்கு எளிதாக உள்ளது என்றும் பிட்ச் எங்களுக்கு நன்றாகப் பொருந்துகிறது என்றும் பலரும் நினைக்கலாம்.
ஆனால் ஒவ்வொரு நாளும் நாட்டை விட்டு வெளியே விளையாடி வருவது, நண்பர்கள், குடும்பத்தினரை பிரிந்து இருப்பது என்பது மிகவும் கடினம். மனத்தளவில் இது இறுக்கத்தை விளைவிக்கிறது.
நான் எனது தாயாரை ஆண்டுக்கு ஒருமுறைதான் பார்க்க முடிகிறது, என் சகோதரியை வருடத்திற்கு ஒருமுறைதான் பார்க்கிறேன். என்னுடைய நண்பர்களை நான் 3-4 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை. எப்போதுமே நாட்டை விட்டு வெளியேதான் இருக்கிறோம். உள்நாட்டுத் தொடர் என்று பெயர் ஆனால் விளையாடுவது ஐக்கிய அரபு அமீரகத்தில். மே.இ.தீவுகளிலிருந்து நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா என்று சென்று வருகிறோம் உண்மையில் கடினமாக உள்ளது.
ஆனாலும் நாங்கள் வெற்றி பெறுகிறோம், சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம். ஆசிய பிட்ச்களில்தான் நாங்கள் விளையாடுவோமா என்று பலரும் பேசினர், ஆனால் இங்கு நிரூபித்துள்ளோம். ஒரு நேரத்தில் தொடரையே கைப்பற்றும் நிலையில்தான் இருந்தோம்.
இந்த அணியை நினைத்து பெருமையடைகிறேன், இவ்வளவு கடினங்களுக்குப் பிறகு நம்பர் 1 இடம் தகுதியானதே. 2 தோல்விகளுக்குப் பிறகு மீண்டெழுவது அவ்வளவு சுலபமல்ல, ஆனால் வீரர்களின் உறுதி அபரிமிதமானது. ஆசாத் ஷபிக், அசார் அலி, யூனிஸ் கான் நெருக்கடியில் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடுகின்றனர். பந்துவீச்சு எப்போதுமே சிறப்பானதுதான். பேட்ஸ்மென்கள் பார்மில் இருக்கும் போது நாங்கள் வெற்றியை ருசிக்க முடிகிறது என்பதை புரிந்து கொண்டோம்.
தொடரில் களத்துக்குள்ளேயும் வெளியேயும் இரு அணி வீரர்களும் நல்ல நட்புறவில் இருந்தனர். நல்ல உணர்வுடன் ஆடப்பட்ட தொடருக்காக இந்தத் தொடர் நீண்ட நாட்களுக்கு நினைவு வைத்துக் கொள்ள தகுதியானது.
சுதந்திர தினம் என்பதை நினைவில் கொண்டு தொடரை சமன் செய்வது சிறப்பான ஒரு தருணம் என்று கருதினோம். நிரூபித்தோம், நான் உண்மையில் ஒரு மகிழ்ச்சியான கேப்டன்” என்றார் மிஸ்பா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago