திருப்பு முனை ஏற்படுத்தியது மைக் கேட்டிங்கிற்கு வீசிய பந்து அல்ல: ஷேன் வார்ன்

By இரா.முத்துக்குமார்

ஷேன் வார்னின் ‘நூற்றாண்டின் சிறந்த பந்து’ என்று வர்ணிக்கப்பட்ட மைக் கேட்டிங்கை வீழ்த்திய அந்த பந்து தனது திருப்பு முனை அல்ல மாறாக அதற்கு 6 மாதங்கள் முன்னதாக ரிச்சி ரிச்சர்ட்சனை வீழ்த்திய பந்துதான் என்று கூறியுள்ளார் வார்ன்.

இது குறித்து அவர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ரிச்சி ரிச்சர்ட்சனை வீழ்த்திய அந்தப் பந்து பற்றி குறிப்பிட்டுள்ளார். இது மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியாகும்.

அந்தத் தொடரின் முதல் டெஸ்டில் ஷேன் வார்ன் தேர்வு செய்யப்படவில்லை, போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர் கூறிய போது, “ஷேன் வார்ன் இருந்திருந்தால் அந்த டெஸ்டில் வென்றிருப்போம்” என்றார்.

அடுத்த டெஸ்ட் போட்டிக்கு ஷேன் வார்ன் தேர்வு செய்யப்பட்டார். முதல் 4 நாட்களுக்கு ஷேன் வார்ன் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை, ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது.

ஆட்டத்தின் கடைசி நாளன்று மே.இ.தீவுகள் 359 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து வலுவான 143-1 என்ற ஸ்கோரில் களமிறங்கியது.

இனி ஷேன் வார்ன், “கடைசி நாள் ஆட்டம் வந்தது, மே.இ.தீவுகள் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது என்னை அனைவரும் கடுமையாக விமர்சித்து ஓரங்கட்டி விட்டனர். அதாவது இவர் சரிப்பட மாட்டார், இந்த மட்டத்தில் ஆடும் அளவுக்கு ஒன்றுமில்லை என்று மக்கள் நினைக்கத் தொடங்கிய வேளை.

அப்போதுதான் ரிச்சி ரிச்சர்ட்சனுக்கு ஒரு பந்தை வீசினேன், அது பிளிப்பர் பந்து. நான் வீசியதிலேயே மிகச்சிறந்த பிளிப்பர் அது. (பிளிப்பர் என்பது லெக் ஸ்பின் கிரிப்பிலேயே பந்தை நேராக செலுத்துவது, இது கும்ப்ளேவுக்கு கைவந்த கலை) ரிச்சி ரிச்சர்ட்சன் பவுல்டு ஆனார். மே.இ.தீவுகள் அது ஒரு மோசமான பந்து, தாழ்வாகச் சென்றது என்றே கருதினர். 90களில் பிளிப்பர்கள் குறித்து யாரும் அதிகம் அறிந்திராத காலக்கட்டம், மேலும் மே.இ.தீவுகள் வீரர்கள் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில்தான் சிறந்து விளங்கினார்கள்.

அந்த விக்கெட்டுடன் 7 விக்கெட்டுகளை 52 ரன்களுக்குக் கைப்பற்றினேன். அப்போதுதான் உண்மையில் நன்றாக வீசினால் டெஸ்ட் மட்டத்தில் பரிணமிக்கலாம் என்ற நம்பிக்கை வந்தது.

ஒரு தடவை நம்பிக்கை ஏற்பட்டுவிடும் போது, அணியில் நம் இடத்துக்காக நாம் போராட வேண்டியதில்லை என்ற அழுத்தம் மறையும் போது நமக்கு சாதகமானது விளையும். அந்த நாள் முதல் அடுத்த 15 ஆண்டுகளுக்கு எனக்கு அதிர்ஷ்டம்தான். அதன் பிறகு அதிகம் மோசமான தினங்கள் அமைந்ததில்லை.

இவ்வாறு கூறினார் ஷேன் வார்ன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்