கர்நாடகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரம் தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.
ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிர அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் காடிவாலே 15 ரன்களிலும், பின்னர் வந்த விஜய் சோல் 5 ரன்களிலும், ஜாதவ் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குர்ரானா 64 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
இதன்பிறகு மோத்வானி 17 ரன்களில் வெளியேற, ஏ.ஆர்.பாவ்னேவுடன் இணைந்தார் எஸ்.டி.அதித்கர். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன் சேர்க்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது மகாராஷ்டிரம். ஏ.ஆர்.பாவ்னே 89 ரன்களுடனும், அதித்கர் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago