இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 300-வது விக்கெட்டை இன்று வீழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில், காலிஸ் விக்கெட்டை வீழ்த்தியபோது, அவர் இந்த மைல்கல் சாதனையை எட்டினார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களில், டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெறும் 4-வது வீரராக ஜாகீர் கான் திகழ்கிறார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த முதல் போட்டி, ஜாகீர் கானுக்கு 89-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை 295 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அவர், முதல் இன்னிங்ஸ்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில், ஜாகீர் கான் இப்போது 4-வது இடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலில், அணில் கும்ப்ளே 619 (132 போட்டிகள்) விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கபில் தேவ் 434 (131 போட்டிகள்) விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், ஹர்பஜன் சிங் 413 (101 போட்டிகள்) விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago