பிலிப் ஹியூஸ் பவுன்சரில் அடிவாங்கி உயிருக்குப் போராடி வரும் நிலையில், 1979-ஆம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் பவுன்சரில் அடிவாங்கிய ரிக் டார்லிங் என்ற வீரர் அதன் பிறகு தனக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
1978-1979-ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா அணியில் புதிதாக நுழைந்த கிரேம் உட், கிரகாம் யாலப், ரிக் டார்லிங் ஆகியோரில் ரிக் டார்லிங்கின் (வலது கை பேட்ஸ்மென்) ஹூக் ஷாட்டிற்கான திறமை அப்போது சிறப்பாக பேசப்பட்டு வந்தது. இவரும் ஹியூஸ் போலவே தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு விளையாடியவர்தான்.
14 டெஸ்ட் போட்டிகளிலேயே இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிந்த போது இவருக்கு வயது 23 கூட சரியாக முடியவில்லை. கவர் திசையில் ரிக் டார்லிங் அருமையான பீல்டர்.
அப்போதெல்லாம் பீல்டிங் என்றாலே இங்கிலாந்தின் டெரிக் ராண்டால் நினைவுதான் அனைவருக்கும் வரும், ஆனால் ரிக் டார்லிங், பீல்டிங்கில், குறிப்பாக கவர் திசையில் ராண்டாலின் வாரிசு என்றே கூறப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிந்தாலும் 1986ஆம் ஆண்டு வரை அவர் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடினார். சிறப்பாக விளையாடினாலும் 14 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு அவர் ஆஸ்திரேலிய அணிக்காக பரிசீலனை செய்யப்படவில்லை.
98 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இவர் 5554 ரன்களை எடுத்தார். இதில் 9 சதங்கள் 32 அரைசதங்கள்.
பாப் வில்லிஸ், கபில்தேவ் பவுன்சரில் நிலைகுலைந்த விவகாரம்:
1979ஆம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் பவுன்சர் ரிக் டார்லிங் இருதயத்தைக் குறிவைத்து நேராகத் தாக்கியது.
ஹூக் ஷாட்டில் சிறந்த வீரரான ரிக் டார்லிங் சுருண்டு விழுந்தார். மூச்சும் நின்று போனது. அப்போது இங்கிலாந்து ஸ்பின்னர் ஜான் எம்ப்யுரே உடனே அருகில் வந்து அவரது இருதயத்தை உலுக்கினார், குத்தினார். அதாவது பவுன்சர் நேராக இருதயப்பகுதியை தாக்கியதில் அவர் வாயில் மென்று கொண்டிருந்த சூயிங்கம் தொண்டையில் சிக்கியது. எம்பியூரே உலுக்கிய உலுக்கில்தான் சூயிங்கம் வெளியே வந்தது ரிக் டார்லிங்கின் மூச்சும் திரும்பியது.
இந்த அடியிலிருந்து உயிர் பிழைத்த அவர் பிற்பாடு, அப்போதுதான் இந்திய அணியில் புதிய ஆக்ரோஷத்துடன் நுழைந்த, கபில் தேவின் பவுன்சரில் தலையில் சரியான அடி வாங்கி, மருத்துவமனையில் ஒரு இரவு சிகிச்சையில் கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளபப்ட்டார்.
ஆனால், இவையெல்லாம் அவரை ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை என்றாலும், இதன் பிறகு ஷெபீல்ட் ஷீல்ட் போட்டி ஒன்றில் ஜான் மெகுவைர் என்ற வேகப்பந்து வீச்சாளர் வீசிய பவுன்சர் ஹெல்மெட்டைக் கடந்து உள்ளே புகுந்து நேராக கண்ணை தாக்கியது.
“என்னை உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவர்கள் என் கண்ணை வெளியே எடுத்து பிறகு உள்ளே வைத்துத் தைத்தனர். இப்போது கூட என் கண்கள் சூரிய வெளிச்சத்திற்கு சரியாக வினையாற்றுவதில்லை” என்றார்.
பவுன்சரில் அடி வாங்கியது முதற்கொண்டே தனது 21 வயது முதலே, மயக்கம் அடிக்கடி வந்து தொந்தரவு செய்தது என்று கூறிய ரிக் டார்லிங் கடைசியாக வலிப்பு நோய்க்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இப்போது 57 வயதாகும் ரிக் டார்லிங், அத்தகைய தருணங்களை நினைத்துப் பார்க்கவே வெறுப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago