இலங்கைத் தொடரில் 3 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளிலிருந்து ஸ்மித் விடுவிக்கப்பட்டுள்ளார், டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பேற்கிறார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஸ்மித்திற்கு ஓய்வு கொடுக்கும் நோக்கத்துடன் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அவரை திரும்ப அழைத்துள்ளது. இது ஓய்வு கொடுக்க என்பதை விட இலங்கையில் மேலும் தோல்விகளைச் சந்தித்து அவரது மனநிலை நிதானம் இழப்பதைத் தவிர்ப்பதற்காகவே என்று தெரிவதாக ஆஸ்திரேலிய வட்டாரங்கள் விமர்சனம் செய்துள்ளன
முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவை சாடியுள்ளனர்.
முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டரில் கூறும்போது, “பணிச்சுமை என்றால் ஸ்டார்க், வார்னருக்கும் பணிச்சுமை இல்லையா? கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பலரை நீக்கி நியூஸிலாந்துக்கு அனுப்பினர். இப்போது ஸ்மித் பாதியிலேயே செல்கிறார்.
மகேலா ஜெயவர்தனே கூறும்போது, “தென் ஆப்பிரிக்கா தொடருக்கான தயாரிப்புக்காக ஸ்மித் நாடு திரும்பியுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது, இந்தத் தொடர் முடிவடையாத போது இது எப்படி? வேறு எந்த கேப்டனாவது இப்படிச் செய்திருக்கிறார்களா?” என்றார்.
மைக்கேல் கிளார்க் கூறும் போது, “ஸ்மித்துக்கு ஓய்வு தேவை என்றால் டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடனேயே நாடு திரும்பியிருக்க வேண்டும். ஒரு கேப்டன் தொடரை வெல்லும் வரை தொடரிலிருந்து விலகுதல் கூடாது. அதன் பிறகு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
மைக்கேல் ஸ்லேட்டர் கூறும்போதும், “ஸ்மித் தொடர் முடியும் வரை அங்கிருக்க வேண்டும் என்பதே முறை” என்றார்.
ஆனால் ஸ்மித் கூறுவது என்னவெனில், “நாங்கள் இதைப்பற்றி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் முன்பே விவாதித்தோம். அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர், பெரிய கோடைக்கால கிரிக்கெட் 6 டெஸ்ட் போட்டிகளுடன் உள்ளது. சில ஒருநாள் போட்டிகள், இடையில் நியூஸிலாந்து அதன் பிறகு இந்தியா செல்கிறோம். எனவே எனக்கு ஒரு இடைவெளி கொடுக்க ஏற்கெனவே ஆலோசிக்கப்பட்டதுதான். நான், டேரன் லீ மேன், ராட்னி மார்ஷ் மற்றும் பிற தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவை எடுக்கவில்லை” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
40 mins ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago