ஆசிய கோப்பையை வெல்வது யார்? பாகிஸ்தான்-இலங்கை இன்று மோதல்

By செய்திப்பிரிவு

வங்கதேசத்தின் மிர்பூரில் இன்று நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும் இலங்கையும் மோதுகின்றன.

ஆசிய கோப்பை லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி கண்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இலங்கை அணி, கோப் பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் இக்கட்டான ஆட்டங்களில் அபாரமாக ஆடி வெற்றி கண்டுள்ள நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், கோப்பையை தக்கவைக்கும் எண்ணத்தோடு இலங்கையை சந்திக்கிறது.

பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களான ஷாகித் அப்ரிதி, உமர் குல் மற்றும் தொடக்க ஆட்டக் காரர்கள் ஷர்ஜீல்கான், அஹமது ஷெஸாத் ஆகியோர் சிறு காயங் களால் அவதிப்பட்டு வருவது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டி களில் சிக்ஸர் மழை பொழிந்து பாகிஸ்தானுக்கு வெற்றித் தேடித் தந்த அப்ரிதியின் இடுப்புப் பகுதி யில் தசைநார் முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் விளையாடுவாரா, மாட்டாரா என்பது போட்டிக்கு முன்னதாகவே தெரியவரும்.

இலங்கை பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா, வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் ஆகியோரை பாகிஸ்தான் எப்படி சமாளிக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் வெற்றிவாய்ப்பு அமையும்.

இந்தத் தொடரில் இதுவரை ஒரு சதம், இரு அரைசதங்களுடன் 248 ரன்கள் விளாசியிருக்கும் சங்ககாரா, பாகிஸ்தான் பௌலர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிமானி, தினேஷ் சன்டிமல், திசாரா பெரேரா உள்ளிட்டோரும் இலங்கையின் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கின்றனர். மூத்த வீரரான மஹேல ஜெயவர்த்தனா தொடர்ந்த சொதப்பி வருவது கவலையளிக்கிறது. எனினும் அவர் எந்த நேரத்திலும் பார்முக்கு திரும்பக்கூடிய ஆற்றல் பெற்றவர் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் லசித் மலிங்கா, சுரங்கா லக்மல், அஜந்தா மென்டிஸ் ஆகியோர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள மென்டிஸ், 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள மலிங்கா ஆகியோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது. பாகிஸ்தான் அணி அஹமது ஷெஸாத், முகமது ஹபீஸ், மிஸ்பா உல் ஹக், உமர் அக்மல், ஃபவாட் ஆலம், ஷாகித் அப்ரிதி என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. கடந்த சில போட்டிகளில் சொதப்பிய கேப்டன் மிஸ்பா உல் ஹக் இந்த முறை சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

பின்வரிசையில் ஷாகித் அப்ரிதி பாகிஸ்தானின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். எனவே அவரை வீழ்த்துவதில் இலங்கை தீவிரமாக செயல்படும். லீக் சுற்றில் மலிங்காவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த அப்ரிதி, இந்த முறை அவருக்கு பதிலடி கொடுப்பாரா அல்லது மீண்டும் சரணடைவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை யில் கடந்த போட்டியில் ஓய்வளிக் கப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இந்தப் போட்டியில் களமிறங்குகிறார். உமர் குல், முகமது ஹபீஸ், சயீத் அஜ்மல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

காயத்தால் பாதிப்பில்லை

பாகிஸ்தான் அணி மிகுந்த நம்பிக்கையோடு உள்ளது. அதனால் கடைசி நிமிடத்தில் காயம் காரணமாக வீரர்களை மாற்றுவது அணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அதன் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: தற்போதைய நிலையில் அப்ரிதி சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் இறுதி ஆட்டத்தில் விளையாடும்பட்சத்தில் அது இலங்கைக்கு நெருக்கடியாகவும் எங்களுக்கு பலமாகவும் அமையும்.காயம் என்பது விளையாட்டின் ஒரு பகுதி. போட்டிக்கு முன்னதாக அவருடைய காயம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு அதன்பிறகு முடிவு செய்வோம். அவரால் விளையாடமுடியாத பட்சத்தில் அவருடைய இடத்துக்கு பொருத்தமான மற்றொருவரை களமிறக்குவோம் என்றார்.

போட்டி நேரம்: மதியம் 1.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்