ஆஸி. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சியளிக்கிறார் ஷேன் வார்ன்

By செய்திப்பிரிவு

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக ஷேன் வார்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

44 வயதாகும் ஷேன் வார்ன், ஆஸி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் லீமானுக்கு ஆலோசகராக இருப்பதோடு, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கிறார்.

இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி வரும் மார்ச்சில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ள நிலையில் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் லீமான் கூறியது: தேவைப்படும்போது அறிவார்ந்த அடிப்படை பயிற்சியின் மூலம் எங்கள் அணி பயனடையும் என நம்புகிறோம். அவ்வப்போது நிபுணர்கள் உதவியுடன் எங்கள் வீரர்களுக்கு பயிற்சியளிப்போம். அப்போது நிபுணர்கள் அவர்களுடைய அனுபவங்களை எங்கள் வீரர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்” என்றார்.

சுழற்பந்து வீச்சு குறித்துப் பேசிய லீமான், “டி20 உலகக் கோப்பை போட்டி வங்கதேசத்தில் நடைபெறுவதால் சுழற்பந்து வீச்சு மிக முக்கியமானதாகும். ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சியளிக்க ஷேன் வார்னைவிட சிறந்த வழி எதுவும் இல்லை” என்றார்.

இது தொடர்பாக வார்ன் கூறுகையில், “ஆஸ்திரேலிய வீரர்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். உலகக் கோப்பைக்காக சிறப்பான உத்திகளை வகுப்பதோடு, மனரீதியாகவும் சிறப்பாகத் தயாராக வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்