ஆட்டத்தின் ஒவ்வொரு துறையிலும் தோற்கடிக்கப்பட்டோம்: ஸ்மித் கடும் ஏமாற்றம்

By இரா.முத்துக்குமார்

இலங்கைக்கு எதிராக முதன் முதலாக ஒயிட்வாஷ் வாங்கிய கேப்டன் என்ற எதிர்மறைச் சாதனைக்குரியவரான ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், தோல்வி குறித்து கடுமையாக ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார்.

“எப்படி இவ்வாறு நிகழ்ந்தது என்பதை புரிந்து கொள்ள உண்மையில் கடினமாக உள்ளது. மீண்டும் ஒரு கடினமான தொடரை எதிர்கொண்டோம், துணைக்கண்டத்தில் தொடர்ச்சியான 3 ஒயிட்வாஷ் தோல்விகள்! நாங்கள் தொட்டது எதுவும் துலங்கவில்லை. பேட்ஸ்மென் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவில்லை. ஸ்பின் பவுலர்களின் நிலையும் அதுதான். வேகப்பந்து வீச்சாளர்களை நான் குறை கூற மாட்டேன். குறிப்பாக ஸ்டார்க் உண்மையில் தன்னை அர்ப்பணித்து வீசினார்.

பேட்டிங்கு, ஸ்பின் பந்து வீச்சும் இந்தச் சூழ்நிலைகளுக்கேற்ப தங்கள் திறமைகளை வளர்த்தெடுப்பது அவசியமாகிறது. ஆட்டத்தின் ஒவ்வொரு துறையிலும் தோற்கடிக்கப்பட்டோம். தனிப்பட்ட முறையிலோ, ஒரு அணியாகவோ போடப்பட்ட எந்தவித திட்டமும் பயனளிக்கவில்லை. எங்களால் இலங்கை அணியை நாங்கள் விரும்பிய அளவுக்கு நெருக்க முடியவில்லை.

இந்த பிட்ச் நிலைமைகளில் இலங்கை ஸ்பின்னர்கள் செய்தது போல் பெரும்பாலான விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள்தான் கைப்பற்ற வேண்டும். அணித் தேர்வாளர்கள்தான் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும், அவர்கள் என்ன செய்தாலும் நான் அதை ஆதரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

முதல் டெஸ்ட் முதல்நாளில் 117 ரன்களுக்கு இலங்கையை சுருட்டினோம், இது மிகப்பெரிய விஷயம். ஆனால் 86 ரன்களே முன்னிலை பெற்றது போதாமல் போனது. மீண்டும் இலங்கை அணியை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியிருக்க வேண்டும் அதையும் நாங்கள் செய்ய முடியவில்லை.

ஒவ்வொரு போட்டியிலும் 2-வதாக நாங்கள் பேட் செய்யும் போதும், 4-வதாக இந்தப் பிட்சில் பேட் செய்ய வேண்டும் என்பதும் எங்கள் மூளையில் இருந்து கொண்டே இருந்தது. தொடரின் முதல் இன்னிங்ஸ் எங்களைக் காயப்படுத்தியது.

என்னதான் ஆஸ்திரேலியாவில் துணைக்கண்ட பிட்ச்கள் போல் செய்து பயிற்சி மேற்கொண்டாலும் துணைக்கண்ட பிட்ச்களை அப்படியே போல்செய்தல் இயலாது, ஏனெனில் துணைக்கண்டத்தில் அவர்களுக்கு ஸ்பின்னில் கூடுதல் பவுன்ஸ் கிடைக்கிறது. இங்கு என்.சி.சி-யில் ஸ்பின் பிட்சில் நானே ஆடினேன், பந்துகள் திரும்பின இல்லையென்று கூறவில்லை, ஆனால் துணைக்கண்டத்தில் ஸ்பின் பந்துகள் கூடுதலாக எழும்புகின்றன.

எனவே பழைய காலத்தில் இருந்த ஆஸ்திரேலிய பிட்ச்கள்தான் சரியானது, ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளில் பழைய மாதிரி பிட்ச்களை மீண்டும் கொண்டு வர வேண்டும், ஆனால் இங்கு அடிலெய்டில் டிராப்-இன் பிட்ச் உள்ளது. இது ஸ்பின்னுக்குக் கடினம், சிட்னி பிட்சும் பழைய மாதிரியில் போடப்பட வேண்டும்”

இவ்வாறு கூறியுள்ளார் ஸ்மித்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்