இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பெற்ற 11-வது வெற்றியாக இது அமைந்தது.
டர்பன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. ஆம்லா 15, குயின்டன் டி காக் 17, கேப்டன் டி வில்லியர்ஸ் 3, டுமினி 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
108 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தநிலையில் டு பிளெஸ்ஸியுடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடினார். டுபிளெஸ்ஸிஸ் 63 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை டி சில்வா பிடிக்க தவறினார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட டுபிளெஸ்ஸிஸ் 113 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் தனது 7-வது சதத்தை அடித்தார். 105 ரன்கள் எடுத்த நிலையில் அவர் குலசேகரா பந்தில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 117 ரன்கள் சேர்த்தது.
டுபிளெஸ்ஸிஸ் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே டேவிட் மில்லரை ஆட்டமிழக்க செய்யும் வாய்ப்பை இலங்கை கோட்டைவிட்டது. இதன் பின்னர் அதிரடியாக விளையாடிய மில்லர் 94 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் தனது 4-வது சதத்தை அடித்தார்.
மேலும் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விரட்டிய அவர் 98 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் சுரங்கா லக்மல் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
308 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 37.5 ஓவர்களில் 186 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக சந்திமால் 36, கேப்டன் உபுல் தரங்கா 26 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பார்னல், டுமினி, இம்ரன் தகிர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக டுபிளெஸ்ஸிஸ் தேர்வானார். 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago