ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டை விசாரித்த முத்கல் கமிட்டி அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

By ஐஏஎன்எஸ்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம், மேட்ச் பிக்சிங் போன்றவை நடைபெற்றது தொடர் பான குற்றச்சாட்டை விசாரித்த முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா ஆகிய 3 வீரர்களும் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.அப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த (பிசிசிஐ) என். சீனிவா சனின் மருமகன் குருநாத் மெய் யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா உள்ளிட்டோர் ஐ.பி.எல். அணிகளின் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான தொலைபேசி உரை யாடல் பதிவுகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மொத்தம் 13 பேர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இதுகுறித்து விசாரிக்க பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ், அசாம் கிரிக்கெட் சங்க உறுப் பினர் நிலாய் தத்தா ஆகியோர் அடங்கிய மூவர் அடங்கிய விசா ரணை குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இந்திய கிரிக்கெட் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகியவற்றின் கேப்டன் தோனி உள்ளிட்டோரிடமும் முத்கல் கமிட்டி விசாரணை மேற்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் முத்கல் கமிட்டி இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடு பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 13 பேர்களின் பெயர்களும் ‘சீல்’ வைக்கப்பட்ட உரையில் வைத்து தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஐபிஎல் சூதாட்ட விவ காரத்தால்தான் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்திய கிரிக் கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து என். சீனிவாசன் ஒதுங்கி இருந்தார். முத்கல் குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் அனுமதி கோரினார். அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை அவர் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விசாரணை நடத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், அறிக்கையில் புதிய தகவல்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். முத்கல் குழு அறிக்கை சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

10-ம் தேதி விசாரணை

முத்கல் கமிட்டியின் அறிக்கை தொடர்பான இறுதி விசாரணை வரும் 10–ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட முன்னணி வீரர்கள் மற்றும் பிரபலங்கள் யார் என்பது 10-ம் தேதி தெரியவரும். இது இந்திய கிரிக்கெட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதாக அமையும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்