ஜடேஜா - வேட் ஸ்லெட்ஜிங் வீடியோவை வெளியிடலாமா? - பிசிசிஐ மீது ஸ்மித் கடும் அதிருப்தி

By ராமு

நடந்து முடிந்த தரம்சலா டெஸ்ட் போட்டியில் ஜடேஜா பேட் செய்த போது விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், கேப்டன் ஸ்மித் இருவரும் மாறி மாறி ஸ்லெட்ஜிங் செய்தனர். இந்த காட்சிகளை அதன் வார்த்தைகளுடன் வீடியோவாக வெளியிட்டது பிசிசிஐ.

இது மிகுந்த ஏமாற்றமளிப்பபதாக இருக்கிறது, மைதானத்தில் நடப்பது மைதானத்துடன் முடிய வேண்டியதே என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆட்டத்தின் அந்தப் பகுதியை மட்டும் கண்டுபிடித்து பிசிசிஐ வெளியிட்டது அதிருப்தியளிக்கிறது. இரு அணிகளும் தொடர் முழுதுமே இத்தகைய வாக்குவாதங்களில் ஈடுபட்டது, ஆனால் கடைசியில் நாங்கள் செய்ததை வீடியோ பதிவாக வெளியிட்டது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

பொதுவாக களத்தில் நடப்பது களத்துடன் முடிவதே. இது கடினமாக ஆடப்பட்ட சவாலான தொடர் எனவே கணத்தின் நெருக்கடியில் ஆங்காங்கே வீரர்கள் சில வார்த்தைகளைப் பயன்படுத்துவது சகஜமே. உணர்ச்சிகள் அதிகம் இருக்கும் என்பது இயல்பானதே. பெரிய தொடரில் அப்படித்தான் இருக்க வேண்டும்.

எனவே பிசிசிஐ மைதானத்தில் நடந்ததை வெளி உலகிற்குக் கொண்டு வந்தது ஏமாற்றமளிக்கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்