யூரோ 2016 கால்பந்து போட்டித் தொடரில் 2-வது முறையாக போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சொதப்பலாக ஆட ஆஸ்திரியாவுடனும் 0-0 என்று டிரா ஆனது. ஐஸ்லாந்து டிராவுக்குப் பிறகு 2-வது டிராவாகும் இது.
குறிப்பாக கோல் அடிக்கக் கிடைத்த அருமையான ஸ்பாட் கிக் வாய்ப்பில் ரொனால்டோ போஸ்டில் அடித்து விரயம் செய்தது போர்ச்சுகல் அணி நிர்வாகத்திற்கு வெறுப்பைக் கிளப்பியது.
ஃபீகோவின் சாதனையை முறியடித்து 128-வது போட்டியில் ஆடும் ரொனால்டோ மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
முதல் நிமிடத்திலிருந்து முன்னணி நிலையில் குவாரெஸ்மா, ரொனால்டோ, நானி ஆடினர். ஆனால் குவாரெஸ்மா ஒரு நேரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் புறக்கணித்து நோக்கமெதுவுமற்று உள்ளுக்குள்ளே விரயமான பாஸ் ஒன்றை அடிக்க ரொனால்டோ அவருக்கு ‘டோஸ்’ கொடுத்தார்.
20 நிமிடங்களுக்குப் பிறகு நானி, ரஃபேல் குரைரோ இணைந்து ஒரு நகர்வை மேற்கொள்ள பந்து ரொனால்டோவுக்கு அடிக்கப்பட ரொனால்டோ பக்கவாட்டு காலில் அதனை கோலாக அடித்திருக்க முடியும் ஆனால் அதனை வைடாக அடித்தார் ரொனால்டோ. சிறிது நேரம் கழித்து நானி, தலையால் அடித்த ஷாட் ஒன்றும் கோலாக மாறவில்லை.
ஆஸ்திரியாவுக்கு 41-வது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பும் விரயமானது. அலாபாவின் ஃப்ரீகிக்கை பினிஷ் செய்ய ஆளில்லை. இடைவேளைக்குப் பிறகும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இரண்டு ஃப்ரீ கிக்குகள் விரயமானது, ஒன்று கிராஸ்பாருக்கு மேல் சென்றது, மற்றொன்று கோலுக்கு வெளியே சென்றது. இதன் மூலம் இந்த ஆட்டத்தில் மட்டும் ஃப்ரீ கிக் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்தது. இது குறித்த புள்ளிவிவரங்களின் படி 36 ஃப்ரீ கிக்குகளில் 13 ஷாட்கள் கிராஸ்பாருக்கு மேல், 12 அவுட்டில் அடிக்கப்பட்டது, 10 கீப்பரால் தடுக்கப்பட்டது.
இப்படியே கோட்டை விடப்பட்ட வாய்ப்புகளாகச் சென்று கொண்டிருக்க ஆட்டம் முடிய 13 நிமிடங்கள் இருந்த போது ரொனால்டோ வேகமாக பாக்ஸிற்குள் பந்துடன் சென்றார். மார்டின் ஹிண்டெரிகருடன் ஏற்பட்ட மோதலில் ரொனால்டோ கீழே தள்ளப்பட பெனால்டி வாய்ப்பு போர்ச்சுகலுக்கு வழங்கப்பட்டது. பெனால்டி மற்றும் ஆஸ்திரிய வீரருக்கு மஞ்சள் அட்டை. ரொனால்டோ ஸ்பாட் கிக்கை அடிக்க அது போஸ்டில் பட்டது, கோலுக்கான அருமையான வாய்ப்பு பறிபோனது. இதற்குச் சில நிமிடங்கள் கழித்து ரொனால்டோ கோல் அடித்தார், ஆனால் மிகச்சரியாக ஆஃப் சைடு என்று கோல் மறுக்கப்பட்டது.
போர்ச்சுகல் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கூறும்போது, “நான் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி பேச விரும்பவில்லை” என்றார்.
அனைத்திற்கும் மேலாக பெனால்டி வாய்ப்பை நழுவ விட்ட ரொனால்டோ ஆட்டம் முடிந்தவுடன் ரசிகர் ஒருவருக்கு செல்ஃபி போஸ் கொடுத்ததும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு டிராவினால் போர்ச்சுக்கல் இனி வரும் ஆட்டங்களில் வென்றேயாக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago