ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடர் தோல்விக்குப் பிறகு வங்கதேசத்தை வீழ்த்தியதன் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ள இந்திய அணி, இந்த ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றியைத் தொடர முயற்சிக்கும். அதேநேரத்தில் பலம் வாய்ந்த பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கும் இலங்கை அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். அவர்கள் இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுப்பதைப் பொறுத்தே இந்திய அணியின் ரன் குவிப்பு அமையும். மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, ரஹானே, தினேஷ் கார்த்திக், அம்பட்டி ராயுடு ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
கடந்த போட்டியில் சதமடித்த கோலி, அரைசதம் கண்ட ரஹானே ஆகியோர் இந்தப் போட்டியிலும் சிறப்பாக ஆடி ரன் குவிப்பார்கள் என நம்பலாம். தினேஷ் கார்த்திக், ராயுடு ஆகியோருக்கு கடந்த போட்டியில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களும் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இந்தியா வலுவான ஸ்கோரை குவிக்க முடியும். இந்தியாவின் பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரையில் மாற்றம் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் சோபிக்காத வருண் ஆரோன் நீக்கப்படுவார் என தெரிகிறது. அவருக்குப் பதிலாக ரோஜர் பின்னி அல்லது ஈஸ்வர் பாண்டே இடம்பெறலாம். மற்றபடி பந்துவீச்சில் எந்த மாற்றமும் இருக்காது.
இலங்கை அணி திரிமானி, சங்ககாரா, ஜெயவர்த்தனா, தினேஷ் சன்டிமால், கேப்டன் மேத்யூஸ், திசாரா பெரேரா என வலுவான பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளது. திரிமானி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. குமார் சங்ககாரா தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவரும், ஜெயவர்த்தனாவும் எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர்கள் என்பதால் இந்திய பௌலர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சில் லசித் மலிங்கா, சுரங்கமா லக்மல் ஆகியோர் கூட்டணி இலங்கையின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கைக்கு வெற்றித் தேடித்தந்த மலிங்கா, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இதுவரை 143 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 78-லும், இலங்கை 53-லும் வெற்றி கண்டுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 11 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், அஜிங்க்ய ரஹானே, அம்பட்டி ராயுடு, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது சமி, வருண் ஆரோன், சேதேஷ்வர் புஜாரா, ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே.
இலங்கை: ஏஞ்செலோ மேத்யூஸ் (கேப்டன்), குஷல் பெரேரா, லஹிரு திரிமானி, குமார் சங்ககாரா (விக்கெட் கீப்பர்), மஹேல ஜெயவர்த்தனா, திசாரா பெரேரா, சதுரங்கா டி சில்வா, தினேஷ் சன்டிமல், சசித்ரா சேனநாயக, லசித் மலிங்கா, சுரங்கா லக்மல், அஜந்தா மென்டிஸ், ஆசன் பிரியாஞ்சன், தமிகா பிரசாத்.
போட்டி நேரம்: மதியம் 1.30
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago