இலங்கைக்கு எதிரான டி 20 தொடருக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஆரோன் பின்ச் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இந்த தொடரின் முதல் ஆட்டம் வரும் 17-ம் தேதி மெல்போர்னிலும், 2-வது ஆட்டம் 19-ம் தேதி விக்டோரியாவிலும், 3-வது ஆட்டம் 22-ம் தேதி அடிலெய்டிலும் நடைபெறுகிறது.
ஆரோன் பின்ச், தற்போது நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ஆஸ்திரேலி அணியை வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் காயம் காரணமாக ஸ்மித் விலகிய நிலையில் விக்கெட் கீப்பர் மேத்யூவேட் தான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் முதல் ஒருநாள் போட்டி யில் முதுகு வலி காரணமாக வேட் விளையாடாததால் ஆரோன் பின்ச் தலைமையில்தான் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோன் பின்ச் கூறும்போது, “ஸ்மித் விளையாடாத நிலையில் மீண்டும் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. 2016-ம் ஆண்டு நடை பெற்ற டி 20 உலகக் கோப்பை முதலே கேப்டன் பதவி என்பது எனக்கு ஏற்றம், இறக்கமாக உள்ளது. நான் காயம் அடைந்ததால் அந்த தொடரில் ஸ்மித் தலைமை வகித்தார்.
ஆனால் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் எந்த நேரத்திலும் எந்த வடிவிலான ஆட்டத்துக்கும் கேப்டன் ஆகும் வாய்ப்பு கிடைக்கும்’’ என்றார்.
ஆரோன் பின்ச், ஆஸ்திரேலிய டி 20 அணிக்கு இதற்கு முன்னர் 6 ஆட்டங்கள் கேப்டனாக இருந்துள்ளார். மேலும் பிக்பாஷ் டி 20 தொடரில் மெல்போர்ன் அணிக்கும் பின்ச் தலைமை வகித்துள்ளார்.
முன்னணி வீரர்கள் பலர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத நிலையில் ஆரோன் பின்ச் மீது தேர்வுக்குழு வினர் அதிக நம்பிக்கை வைத்துள் ளனர். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு வார்னர், ஸ்மித் ஆகி யோர் டி 20 தொடரில் சேர்க்கப்படவில்லை.
மேலும் டி 20 அணிக்கு பயிற்சி யாளராக முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் உள்ள மற்ற வீரர்கள் இன்று தேர்வு செய்யப்படுவார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago