இந்திய மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார், யோகேஷ்வர் தத் ஆகியோர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தீர்ந்துள்ளது.
2016-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் சுஷில் குமார் 74 கிலோ எடைப் பிரிவிலும், யோகேஷ்வர் தத் 65 கிலோ எடைப்பிரிவிலும் பங்கேற்க இருக்கின்றனர். முன்னதாக சுஷில் குமார் (66 கிலோ எடைப்பிரிவு), யோகேஷ்வர் தத் (60 கிலோ எடைப்பிரிவு) ஆகியோர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற எடைப்பிரிவு போட்டிகள் 2016-ல் ரியோடி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இருக்காது என்று உலக மல்யுத்த அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.
இதையடுத்து 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் சுஷில் குமார், யோகேஷ்வர் தத் ஆகியோர் இந்த எடைப்பிரிவுகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இருவரும் தங்கள் எடைப்பிரிவுகளை மாற்றிக் கொண்டு அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.
சுஷில் குமார் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். யோகேஷ்வர் தத் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago