ஆஸ்திரேலியாவை 2-1 என்று வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் விராட் கோலி, ஸ்மித், ஜடேஜா, ரஹானே ஆகியோர் தங்களது கருத்தினைப் பதிவு செய்தனர்.
விராட் கோலி: நம்ப முடியவில்லை. இதுவரை எங்களது சிறந்த தொடர் வெற்றி இதுவே. இங்கிலாந்து தொடர் தீவிரமாக இருந்தது என்று நினைத்தேன், ஆனால் ஆஸ்திரேலியா எங்களுக்கு சவால் அளித்த விதம் அருமை. ஆனால் நம் வீரர்களும் தொடர்ந்து வீழ்ச்சியிலிருந்து எழுச்சி பெற்றனர். இது நம் வீர்ர்களின் உறுதியையும் முதிர்ச்சியையும் காட்டுகிறது. ரஹானே அணியை உண்மையில் சிறப்பாக வழி நடத்தினார்.
எங்களது உடல் நலப் பேணிகாப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் உண்மையில் பலன்களை அளித்துள்ளது. இந்த சீசன் முழுதுமே வீர்ர்கள் சிறப்பாக ஆடினர். கடந்த காலங்களில் ஒரு செஷன் ஆட்டத்தில் நாம் சோடை போய் அதை அப்படியே விட்டு விடுவோம், இந்த சீசனில் அது நடக்கவில்லை. இது அணிக்கான சீசன். ஏதோ ஓரிரு தனிநபர்கள் மட்டும் நிமிர்ந்து நின்றார்கள் என்பதல்ல, அணி ஒட்டுமொத்தமாக நிமிர்ந்து நின்றது, நம்பமுடியாததாக உள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள் காட்டிய உடற்கோப்பு மற்றும் தொடர்ந்து வீசிக் கொண்டிருப்பதற்கான அவர்கள் அவா மிகவும் அருமை. ஆட்டத்தையே மாற்றக்கூடியதாக அமைந்தது.
சில வாரங்களில் நானும் 100% உடற்தகுதி பெற்று விடுவேன்.
ஸ்மித்: அருமையான டெஸ்ட் தொடர், நான் பங்குபெற்ற சிறந்த டெஸ்ட் தொடர்களில் இதுவும் ஒன்று. இந்தியாவுக்கு பாராட்டுக்கள், இந்திய அணி அபாரமானது. குறிப்பாக உள்நாட்டில் அவர்களது ஆட்டம் பாராட்டுக்குரியது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்த மட்டில் எங்களுக்கு கடினமாக இருந்தது. ஆனாலும் இந்திய அணிக்கு பெரிய சவால்களை அளித்தது அணி குறித்த பெருமையை என்னிடத்தில் அதிகரித்துள்ளது.
நேற்று உணவு இடைவேளைக்குப் பிறகு 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் விழுகிறது என்றால் பின்னடைவுதான். ஆனால் இந்திய அணிக்குத்தான் என் பாராட்டுக்கள். குறிப்பாக உமேஷ் யாதவ் அபாரமாக வீசினார். அனைவருமே அருமையாக வீசினர்.
தொடக்கத்தில் எங்களை இந்தத் தொடரிலிருந்து அனைவருமே கைகழுவினர். 4-0 ஒயிட்வாஷ் என்றனர். ஆனால் நாங்கள் சரிசமமாக ஆடியதில் மகிழ்ச்சி. சில தருணங்களை நழுவ விட்டோம் என்று கூறலாம். இந்தியாவுக்கு எதிராக இதனை நாம் செய்ய முடியாது. என்ன ஒரு அருமையான மைதானம், பிட்சும் நல்ல பிட்சாக அமைந்தது. பந்துகள் வேகமும், எழுச்சியும் கண்டது, இதுவே எங்களுக்கு வேண்டியது. ஸ்பின்னர்களுக்கும் சாதகமாக அமைந்தது.
நின்று ஆடினால் ரன்கள் எடுக்கலாம். இந்தத் தொடர் முழுதுமே நான் தீவிர கவனத்துடன் ஆடினேன். அணிக்காக சிறப்பாக ஆட வேண்டும் என்று நினைத்தேன். சிலவேளைகளில் நான் என் உணர்வுகளை கட்டுப்படுத்தாது நழுவ விடுகிறேன், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago