டெஸ்ட் கிரிக்கெட்: பெருமை சேர்த்த இந்திய ஜாம்பவான்கள்

By பெ.மாரிமுத்து

1932-ம் ஆண்டில் இருந்து 84 ஆண்டு காலம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பயணம் செய்து வருகிறது. இதில் இந்திய அணி சிகரத்தையும் தொட்டுள்ளது, வீழ்ச்சியையும் சந்தித்து இருக் கிறது. பல காலகட்டங்களில் பல வீரர்கள் இந்திய அணியை தோளில் சுமந்திருக்கிறார்கள். ஒவ்வொரு இந்திய ஜாம்பாவான்களின் பெரும் சாதனைகள் இந்திய அணிக்கு டெஸ்ட் அரங்கில் மகுடம் சூட்டியுள்ளன. அதன் ஒரு சிறிய தொகுப்பு.

டெஸ்ட் பயணம்

இந்திய அணி இதுவரை 499 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி யிருக்கிறது. இதில் 129 போட்டியில் வெற்றியும், 157 போட்டியில் தோல் வியும், ஒரு போட்டி டையிலும், 212 போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளன. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 25.95 ஆகும்.

தொடர் சாதனைகள்

டெஸ்ட் விளையாடும் அத்தனை நாடுகளுக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை வென்றுள்ள பெருமை இந்தியாவுக்கு உண்டு. 1952-ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராகத் தான் இந்திய அணி முதன் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது. அயல் மண்ணை பொறுத்தவரை இதுவரை ஆஸ்திரேலிய மண் ணிலும், தென் ஆப்பிரிக்க மண்ணிலும் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதே கிடையாது என்பது சோகமான விஷயம்.

1968-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு சென்ற இந்திய அணி டுனிடனில் நடந்த டெஸ்ட்டில் நியூஸிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் முதல் வெற்றியாக இது பதிவானது. இந்த தொடரையும் 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்று வரலாறு படைத்தது.

சச்சின் 200

இந்தியா இதுவரை 499 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளது. இந்திய வீரர்கள் தரப்பில் அதிக டெஸ்ட் போட்டி விளையாடியவர் சச்சின் தான். அதிக ஆண்டுகள் இந்தியாவுக்காக டெஸ்ட் விளை யாடிய வீரரும் சச்சின் டெண்டுல்கர் தான். 84 வருடங்கள் இந்தியா டெஸ்ட் போட்டிகள் விளையாடியதில் சுமார் 40% போட்டிகளில் சச்சினும் விளையாடியிருக்கிறார். அதாவது அவர் 200 டெஸ்டில் பங்கேற் றுள்ளார்.

285 வீரர்கள்

இந்தியாவில் இதுவரை 285 வீரர்கள் டெஸ்ட் போட்டியில் விளை யாடி உள்ளனர். இதில் 77 பேர் சதம் அடித்துள்ளனர். முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை லாலா அமர்நாத் பெற்றுள்ளார். அவர் 1933-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 118 ரன்கள் விளாசினார்.

எளிதில் முறியடிக்க முடியாத அளவுக்கு 51 சதங்கள் அடித்து உச்சத்தில் இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். உலகளவில் அதிக சதம் அடித்தவர் என்ற பெருமையும் சச்சினையே சேரும். அவருக்கு அடுத்த படியாக ராகுல் டிராவிட் 36, கவாஸ்கர் 34, சேவக் 23, அசாரூதீன் 22, லஷ்மண் 17, வெங்சர்க் கார் 17, கங்குலி 16, விராட் கோலி 11 சதங்கள் அடித்துள்ளனர்.

அபார வெற்றிகள்

கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. ஹாசிம் அம்லாவும், டிவில்லியர்ஸும் நீண்ட நேரம் களத்தில் நின்று பிரம்மிக்க வைத்த போட்டி இது. இந்த போட்டியில் இந்தியா 337 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றதில் இது தான் அதிக பட்சம். இன்னிங்ஸ் வெற்றிகளை பொறுத்தவரை 2007-ம் ஆண்டு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது இந்தியா. அதுதான் அதிகபட்ச இன்னிங்ஸ் வெற்றி.

கும்ப்ளேவின் 10

உலக அளவில் அதிக விக்கெட் டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருப்பவரும் அனில் கும்ப்ளே தான். அவர் 619 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் வரிசை யில் முதலிடத்திலும் இருக்கிறார்.

1999-ம் ஆண்டு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத் தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் கும்ளே. 139 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் அறுவடை செய்த 2-வது வீரர் கும்ப்ளே என்பது குறிப்பிடத்தக்கது.

சேவக் மேஜிக்

டெஸ்ட் கிரிக்கெட்டின் உரிய இலக்கணத்தை உடைத்து விளை யாடியவர் வீரேந்திர சேவக். இந்திய அணி சார்பாக முச்சதம் அடித்த ஒரே வீரர் சேவக் மட்டுமே. அதே சமயம் இரண்டு முச்சதம் அடித்து சேவக் பிரம்மிக்க வைத்திருக்கிறார். சென்னையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சேவக் எடுத்த 319 ரன்கள் தான் இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். பாகிஸ்தானுக்கு எதிராகவும் சேவக் 309 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக ரன்கள்

இந்தப் பட்டியலில் சச்சின், டிராவிட் முன்னிலை வகிக்கின்றனர். சச்சின் 15,921 ரன்களும், டிராவிட் 13,265 ரன்களும் குவித்துள்ளனர். இந்தியா சார்பாக 10 ஆயிரம் ரன்கள் குவித்தவர்களின் பட்டிய லில் கவாஸ்கர் 3-வது இடத்தில் உள்ளார். அவர் 10, 122 ரன்கள் சேர்த்துள்ளார்.

4-வது இன்னிங்ஸ் நாயகர்கள்

டெஸ்ட் போட்டியில் 4-வது இன்னிங்ஸ் விளையாடுவது என்பது மிகவும் கடினமானது. இந்தியாவை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் தான் இதுவரை அதிக முறை 4-வது இன்னிங்ஸ் விளை யாடியிருக்கிறார். 4-வது இன்னிங் ஸில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையும் சச்சினுக்கே உண்டு. கவாஸ்கர் தான் இந்திய அணி சார்பாக விளையாடி யவர்களில் 4-வது இன்னிங்ஸில் அதிக சராசரியை வைத்திருக் கிறார். கவாஸ்கரை தொடர்ந்து டிராவிட், லஷ்மண் ஆகியோர் 4-வது இன்னிங்ஸில் அதிக சராசரி வைத்திருக்கிறார்கள்.

கேப்டன்கள்

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் தோனி தான். அவர் தலைமையில் இந்திய அணி 60 டெஸ்ட் போட்டிகளில் 27-ல் வெற்றி பெற்றது. 18 தோல்வி, 15 டிரா கண்டிருந்தது. அவருக்கு அடுத்தபடியாக கங்குலி 21 வெற்றிகளையும், பட்டோடி 9 வெற்றிகளையும் இந்திய அணிக்காக வசப்படுத்தியிருந்தனர். இதில் வெளிநாட்டு தொடர்களில் எப்படி வெற்றி பெறவேண்டும் என்ற வித்தையை கங்குலிதான் முதலில் கண்டறிந்தார்.

2009-ம் ஆண்டு மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ் டில் 9 விக்கெட்டுக்கு 726 ரன்களுடன் டிக்ளேர் செய்தது இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும். 1974-ம் ஆண்டு லார்ட்சில் இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன்களில் சுருண்டது மோசமான ஸ்கோராகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்