போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணியை இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெரிய வெற்றியைப் பெற்றது.
மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 2-வது முறையாக வலுவான இந்திய பேட்டிங்கை முதலில் களமிறக்கித் தவறு செய்வதன் அர்த்தம் என்னவென்று புரியவில்லை. பந்து வீச்சுக்குச் சாதகமான நிலை இருப்பதாக பார்ப்பதற்கு தெரிந்தாலும் உண்மையில் பவுலிங்குக்கு பெரிய அளவில் சாதகமில்லை, மேலும் மே.இ.வீச்சாளர்களும் சரியான லெந்தைக் கண்டுபிடிக்கத் திணறினார், ஒன்று ஷார்ட் பிட்ச், இல்லையேல் ஃபுல் லெந்த், இதனால் கட், புல், டிரைவ் என்று இந்திய பேட்ஸ்மென்களுக்கு எளிதாக அமைந்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணி ரஹானேயின் சதம், கோலியின் 87 ரன்கள், தவணின் 63 ரன்களுடன் 43 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்தது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி அதிக 300+ ரன்களைக் குவித்துள்ளது, அதாவது 96 முறை இந்திய அணி 300+ ரன் எண்ணிக்கையை எட்டி சாதனை புரிந்துள்ளது,
அஜிங்கிய ரஹானே தனது 3-வது ஒருநாள் சதத்தை எடுத்தார். சதம் எடுக்கும் முன்னர் கொஞ்சம் ஆட்டத்தை மந்தப்படுத்தினார். இது மும்பை வீரர்களுக்கேயுரிய தனி உளவியல் கூறாகும். ஷிகர் தவண் மீண்டும் அனாயசமாக ஆடி 59 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார். கேப்டன் விராட்கோலி அதிக சிரமம் இல்லாத ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடி 66 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 87 ரன்கள் எடுத்து ஜோசப் பந்தில் அவுட் ஆனார்.
மே.இ.தீவுகள் அணியில் ஷாய் ஹோப் மட்டுமே 88 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிச்கர்களுடன் 81 ரன்கள் எடுத்து நடக்க வேண்டியதை தள்ளிப்போட்டார்.
தொடக்கத்திலேயே ரன் எடுக்காமல் பொவெல், மொகமது ஆகியோர் விக்கெட்டை புவனேஷ் குமாரிடம் இழந்த மே.இ.தீவுகள் அணியை மழையும் காப்பாற்றவில்லை.
ரஹானே ஷார்ட் பிட்ச் பந்தை அப்பர் கட் சிக்ஸ் அடித்தார், ஷிகர் தவணுக்கு வலையில் கூட கொஞ்சம் சிரமம் ஏற்படுத்தியிருப்பார்கள் போலிருக்கிறது, ஆனால் ஆட்டத்தில் அவருக்கு அவர் இஷ்டப்படி ட்ரைவ் ஆட பயிற்சி அளிக்கப்பட்டது போன்ற லெந்தில் பந்து வீச்சு அமைந்தது. ஜேசன் ஹோல்டரை ட்ரைவ்களாக ஆடினார், உடனே ஷார்ட் பிட்ச் போடுகிறே பார் என்றார் ஹோல்டர், புல்ஷாட் புவுண்டரி சென்றது. முதல் 10 ஓவர்களில் இந்திய தொடக்க வீரராக இருக்கப் போய் 63 ரன்களோடு சென்றது. வார்னர், ஹேல்ஸ், ஜேசன் ராய், பிஞ்ச் போன்றோர் இருந்தால் 80 ரன்களுக்கும் மேல் சென்றிருக்கும்.
தவண் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறிய பிறகு கோலி, ரஹானே சேர்ந்தனர், முதல் போட்டியில் நன்றாக வீசிய தேவேந்திர பிஷூ நேற்று 9 ஓவர்களில் 60 ரன்கள் விளாசப்பட்டார், இவருக்கும் லெந்தில் பந்து உட்காரவில்லை.
ரஹானே முதல் 45 பந்துகளில் 36 ரன்கள் என்று இருந்தவர் பிறகு அடுத்த 50 ரன்களை 40 பந்துகளில் அடித்தார், சதம் நெருங்கும் போது பதற்றமடைந்தார். கே.எல்.ராகுலின் முகம் இவரை பதற்றப்படுத்தியிருக்கலாம் இதனால் ஒரு எட்ஜ், ஒரு ரிஸ்க் ரன் என்று சதத்திற்காக தடுமாறினார். இதனால் 104 பந்துகளில் 103 ரன்களை, 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் எடுத்து கமின்ஸ் பந்தில் பவுல்டு ஆனார். கோலியும் இவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 97 ரன்களைச் சேர்த்தனர்.
விராட் கோலி கடைசியில் அதிவேக ரன் குவிப்பில் ஈடுபட்டார், கோலி தனது கடைசி 50 ரன்களை 25 பந்துகளில் விளாசினார். வழக்கம் போல் 4 சிக்சர்களும் பவர் சிக்ஸ்கள் அல்ல, அனாயசமாக அடித்த சிக்சர்களே. கடைசியில் ஜோசப்பின் வேகம் குறைக்கப்பட்ட பந்தை லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஜேசன் ஹோல்டர் கடைசியில் படுமோசமாக வீசினார். கடைசி 9 ஓவர்களில் 99 ரன்கள் விளாசல். இந்தியா மீண்டுமொரு 300+ ஸ்கோரை எட்டியது. ஜோசப் 8 ஓவர்கள் 73 ரன்கள், ஹோல்டர் 8.5 ஓவர்கள் 76 ரன்கள். நர்ஸ் மட்டுமே மிக சிக்கனமாக வீசி 9 ஓவர்களில் 38 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.
புவனேஷ், குல்தீப் அபாரம்:
புவனேஷ் குமார் தனது அற்புதமான பந்து வீச்சைத் தொடர்ந்தார். முதல் 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். முதல் பவுண்டரி அடிக்க 6-வது ஓவர் வரை காத்திருந்ததால் மே.இ.தீவுகளுக்கு தேவைப்படும் ரன் விகிதம் அப்போதே ஓவருக்கு 8 ரன்களைக் கடந்து சென்றது.
குல்தீப் யாதவ்வை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, லூயிஸ், ஹோல்டர் ஆகியோர் தோனியிடம் ஸ்டம்ப்டு ஆக, அருமையாக ஆடிய ஷாய் ஹோப் குல்தீப் யாதவ்விடம் எல்.பி.ஆனார். ஆனால் ஹோப், குல்தீப்பை லாங் ஆஃப் மேல் ஒரு சிக்ஸ் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. ராஸ்டன் சேஸ் 37 பந்துகளில் 33 ரன்களையும் நர்ஸ் 19 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ மே.இ.தீவுகள் 43 ஓவர்களில் 205/6 என்று முடிந்தது. ஆட்ட நாயகன் ரஹானே.
இந்திய அணியின் ‘பிக்னிக்’ தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
45 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago