கிரிக்கெட் போட்டியில் மோதல்: வங்கதேசத்தில் சிறுவன் கொலை

By ஏஎஃப்பி

வங்கதேசத்தில் கிரிக்கெட் போட்டி யின்போது நடந்த மோதலில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்.

வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் நகரில் 2 உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. இதில் ஃபைசல் ஹொசேன் என்ற 14 வயது சிறுவன் தனது அணிக்காக பீல்டிங் செய்துகொண்டு இருந்தான். அப்போது எதிர் அணியின் பேட்ஸ்மேன், பந்தை அடித்துவிட்டு ரன் எடுப்பதற்காக ஓடினார். இதைப்பார்த்த ஃபைசல் ஹொசேன், தாவிச் சென்று பந்தை எடுத்து வீசினான்.

ஹொசேன் அடித்த பந்து ஸ்டம்பில் பட, பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அந்த பேட்ஸ்மேன் ஸ்டம்பை எடுத்து ஃபைசல் ஹொசேன் மீது வீசினார். அப்போது அந்த ஸ்டம்பின் கூரான பகுதி ஹொசேனின் கழுத்தை தாக்கியது. இதனால் படுகாயமடைந்த ஹொசேன், சிறுது நேரத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பற்றி சிட்டகாங் பகுதியின் உதவி கமிஷனர் ஜகாங்கிர் ஆலம் கூறும்போது, “பேட்ஸ்மேனுக்கு அருகில் நின்றதால் ஃபைசல் ஹொசேனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஃபைசல் ஹொசேன் மீது ஸ்டம்பை வீசிய பேட்ஸ்மேன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வங்கதேசத்தில் கிரிக்கெட் போட்டிகளின்போது மோதல்கள் நடப்பது சகஜமாகி வருகிறது. கடந்த மே மாதத்தில்கூட கிரிக்கெட் போட்டியின்போது நடந்த மோதலில் 16 வயது இளைஞர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்