தாய்லாந்து ஓபன் அரையிறுதியில் பயஸ்

By செய்திப்பிரிவு

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-இத்தாலியின் டேனிலே பிரேச்சியாலி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பயஸ்-டேனிலே ஜோடி வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் 6-7 (4), 7-6 (8), 10-8 என்ற செட் கணக்கில் கொலம்பியா வின் ஜுவான் செபாஸ்டியன்-ராபர்ட் பாரா ஜோடியை தோற்கடித்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இரு பிரதான செட்களும் டைபிரேக்கர் வரை சென்றது. இதில் முதல் செட்டை இழந்த பயஸ் ஜோடி, 2-வது செட்டை கைப்பற்றியது. இதனால் வெற்றியைத் தீர்மானிக்க 3-வது செட்டான டைபிரேக்கர் செட்டுக்கு ஆட்டம் சென்றது. அதில் எதிர் ஜோடி கடும் சவால் அளித்த போதும், அபாரமாக ஆடிய பயஸ் ஜோடி அந்த செட்டை 10-8 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்