சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் கேரளம் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 68-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்று வருகிறது.
புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கேரளமும், உத்தரகண்டும் மோதின. திங்கள்கிழமை நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் மிசோரமிடம் தோல்வி கண்ட கேரள அணி, உத்தரகண்டுக்கு எதிராக ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடியது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய கேரள அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தையும் தனது கட்டுக்குள் வைத்திருந்த கேரள அணி, அதில் மேலும் ஒரு கோலை அடித்து 4-0 என்ற கோல் கணக்கில் உத்தரகண்டை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்த கேரள அணி அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago