சீன ஓபன்: 2-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

By செய்திப்பிரிவு

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான சீனாவின் நோவக் ஜோகோவிச் 6-0, 6-3 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் லூகாஸ் ரசூலை தோற்கடித்தார். மற்றொரு முதல் சுற்றில் ரஃபேல் நடால் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் கொலம்பியாவின் சாண்டியாகோ ஜிரால்டோவை தோற்கடித்தார். நடால் தனது 2-வது சுற்றில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரெய்பரையும், ஜோகோவிச் தனது 2-வது சுற்றில் ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவையும் சந்திக்கின்றனர்.

பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட் தனது முதல் சுற்றில் 6-3, 7-6 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் புளோரியன் மேயரையும், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா தனது முதல் சுற்றில் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஆண்ட்ரே செப்பியையும் தோற்கடித்தனர். இதேபோல் அமெரிக்காவின் சாம் ஹியூரி 7-6 (3), 6-3 என்ற நேர் செட்களில் ரஷியாவின் மிகைல் யூஸ்னியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

செரீனா வெற்றி

மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது 2-வது சுற்றில் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோனேயை தோற்கடித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 2-வது செட்டில் முதல் கேமிலேயே தனது சர்வீஸை இழந்த செரீனா, பின்னர் ஆக்ரோஷமாக ஆடி வெற்றி கண்டார். அதேநேரத்தில் செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றில் தோல்வி கண்டார். ஜெர்மனியின் சபைன் லிசிக்கி 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வீனஸை தோற்கடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்