சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி களின்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சில பாகிஸ்தான் வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இதைத்தொடர்ந்து முகமது இர்பான், ஷார்ஜில், காலித், நாசிர் ஜம்ஷெட், ஷாசாயிப் ஹசன் ஆகிய வீரர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத் துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான ஜாவித் மியான்தத், தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து சூதாட்ட பிரச்சினைகளில் சிக்குவது வருத்தம் அளிக்கிறது. வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுக்க வேண்டும்.
சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களை இனியும் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago