பிரான்சில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடரின் பிரிவு டி போட்டியில் செக்.குடியரசு அணியை ஸ்பெயின் 1-0 என்று வீழ்த்தியது. 87-வது நிமிடத்தில் இனியெஸ்டாவின் உதவியுடன் ஜெரார்ட் பிகே தலையால் முட்டி வெற்றிக்கான கோலை அடித்தார்.
பிரான்சின் டூலவ்சில் நடைபெற்ற இந்த ஆட்டம் முழுதும் கடந்த யூரோ சாம்பியன் ஸ்பெயின் அணியின் நட்சத்திரம் இனியெஸ்டாவின் காலில் இருந்தது என்றால் மிகையாகாது, அவர்தான் போட்டியை நடத்தினார், அவர்தான் விறுவிறுப்புக் கூட்டினார், அவர்தான் முழுக்க முழுக்க அச்சுறுத்தலாக விளையாடினார்.
ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் டி ஜியா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியது முதல் ஸ்பெயின் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது, ஆனால் இந்தப் போட்டியில் மிகப்பெரிய கோல் கீப்பர் ஐகெர் கேசிலாஸுக்குப் பதிலாக டி ஜியாவையே ஸ்பெயின் பயிற்சியாளர் வின்செண்ட் டெல் பாஸ்க் களமிறக்கினார்.
செக்.குடியரசின் பாதுகாப்பு உறுதியினால் இனியெஸ்டாவின் ஊடுருவல் கோலாக மாற முடியாமல் ஸ்பெயின் அணியை வெறுப்பேற்றியது. 8-வது நிமிடத்தில் யுவான்பிரான் பிகேயின் அபாயகரமான கிராஸ் ஹூப்னிக்கினால் தடுக்கப்பட்டது.
ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு உண்மையான கோல் வாய்ப்பு கிட்டியது. ஜுவான்பிரானின் அருமையான குறுக்குக் கள பாஸ் டேவிட் சில்வாவிடம் வலது புறத்தில் வர அவர் மொராட்டாவுக்கு சரியாக பந்தை அடிக்க மொராட்டா கோல் அடிக்க வேண்டியவர் நேராக செக். கையில் கொடுத்தார், கோல் வாய்ப்பு பறிபோனது. மிகவும் நெருக்கமாக வந்து மொராட்டா கோல் வாய்ப்பை பறிகொடுத்தார்.
18வது நிமிடத்தில் இனியெஸ்டா ஒரு அபாரமான பாஸை அளிக்க அது கார்னரில் முடிந்தது, ஆனால் எதுவும் நடக்கவில்லை. 25-வது நிமிடத்தில் இனியெஸ்டாவின் கோணமான பாஸ் ஒன்று பாக்சில் யுவான்பிரானிடம் வந்தது ஆனால் இவரால் பந்தைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை, மொராட்டாவிடமும் அளிக்க முடியவில்லை. துல்லியமாக வேகமாக இனியெஸ்டா அடித்தார், ஆனால் அத்தகைய தரமான ஷாட்டை பிக் செய்யும் திறன் அங்கு பிகேயிடம் இல்லை. 29-வது நிமிடத்தில் மீண்டும் இனியெஸ்டாவின் பாஸ் ஒன்று மொராட்டாவிடம் சரியாக வர அவர் அதனை இடது காலால் கோல் நோக்கி அடித்தார். ஆனால் செக் அதனை எளிதில் வெளியே திருப்பி விட்டனர். இந்த நிலையில் செக்.குடியரசு தங்களது தாக்குதல் ஆட்டத்தைக் கைவிட்டனர் என்றே கூற வேண்டியுள்ளது.
பிறகு 39, 40வது நிமிடங்களிலும் இனியெஸ்டாவின் ஆதிக்க பாஸ் தொடர்ந்தது ஆனால் கோலாக மாறவில்லை. இடைவேளையின் போது 0-0 என்றே இருந்தது. பந்தை தங்கள் ஆதிக்கத்தில் ஸ்பெயின் வைத்திருந்தாலும் இனியெஸ்டாவின் பாஸ்களை புரிந்து கொண்டு செயல்படும் வீரர்களோ, கள வியூகமோ இல்லை. ஆட்டம் தொடங்கி 46-வது நிமிடத்தில் மீண்டும் இனியெஸ்டாவின் பாஸ் ஒன்று பாக்சிற்குள் மொராட்டாவிடம் வர அவர் ஒரு கிராஸ் அடித்தார் இதுவும் கோலாக மாறவில்லை. 56-வது நிமிடத்தில் செக்.குடியரசு வீரர் காதெராபெக் தலையால் முட்டிய பந்து தவறாக ஸ்பெயின் வீரர் மொராட்டாவிடம் வர அவர் அடிப்பதற்குள் செக். தடுப்பணை அவரைப் புடை சூழ்ந்தது. இன்னொரு வாய்ப்பு நழுவ விடப்பட்டது. 75-வது நிமிடத்திலும் இனியெஸ்டா பந்தை செக். வீர்ர்களிடமிருந்து அபாரமாகத் தக்க வைத்து நொலிடோவிடம் பாஸ் செய்தார். கோலுக்கு அருகே டி வட்டத்திற்குள் இருந்த நொலிட்டோ அதனை சரியாகக் கட்டுப்படுத்த தவறினார். இந்த வாய்ப்பும் நழுவியது.
இந்நிலையில்தான் 87-வது நிமிடத்தில் சரியாக கிளியர் செய்யப்படாத கார்னர் ஷாட் ஒன்று இனியெஸ்டாவிடம் வர இடது புறம் பாக்ஸிலிருந்து கோல் கீப்பருக்கும், தடுப்பாட்ட வீரருக்கும் இடையில் அருமையான ஒரு பாஸைக் கொடுக்க இம்முறை பிகே அதனை தலையால் கோலுக்குள் செலுத்தினார், ஸ்பெயின் 1-0 என்று முன்னிலை பெற்றது.
கூடுதல் நேரத்தில் அதாவது 92-வது நிமிடத்தில் செக்.குடியரசு சமன் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இடது புறத்திலிருந்து செய்யப்பட்ட கிராஸ் டாரிடாவிடம் வர அவர் அதனை கோல் நோக்கி அடித்தார். அது ஸ்பெயின் கோல் கீப்பர் டி ஜியாவுக்கு நெருக்கமாகவே இருக்க அவர் அதனை திசைதிருப்பினார்.
ஆட்டம் முடிந்தது, ஒரு ஸ்பெயின் ரக வெற்றியே இது, அதிகம் பந்துகளை சுமந்து சென்றனர், ஆனால் ஒரேயொரு கோல் மட்டுமே வெற்றிக்கு வித்திட்டது.
இனியெஸ்டாவின் ஆட்டம் மட்டும் தனித்து வேறு ஒரு உலகில் இருந்தது. உத்திரீதியாக 100% சரி என்று கூறும் அளவுக்கு அவரது பாஸ், கணிப்புகள் அமைந்தன. அவரை பின்பற்றி ஆடும் ஸ்ட்ரைக்கர் ஸ்பெயின் அணியில் இல்லை, குறைந்தது இந்த ஆட்டத்தில் வெளிப்படவில்லை என்று கூறலாம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago